Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

21 நாட்களாக புதிய பாதிப்பு இல்லை – பச்சை மண்டலங்களாக மாறிய மாவட்டங்கள்…

0 Comments

Published on: Thursday, May 14th, 2020 at 7:21 PM

21 நாட்களாக புதிய பாதிப்பு இல்லை – பச்சை மண்டலங்களாக மாறிய மாவட்டங்கள்: After 21 days some districts goes green zone

தமிழகத்தில் ஈரோடு, திருப்பூர், சிவகங்கையை தொடர்ந்து தற்போது கோவை, நாமக்கல் மாவட்டங்களும், சேலம் மாநகரமும் கொரோனா இல்லாத பகுதிகளாக மாறியுள்ளன.

கோவை மாவட்டத்தில் முதல் தொற்றாகவும், தமிழகத்தில் 7வது தொற்றாகவும், மார்ச் 22ல் ஸ்பெயின் நாட்டில் இருந்து வந்த 25 வயது பெண் பாதிக்கப்பட்டார். ஏப்ரல் 1 மற்றும் 5ஆம் தேதிகளில் தலா 28 பேர் பாதிக்கப்பட்டதால் கோவையின் பாதிப்பு எண்ணிக்கை 58ஆக உயர்ந்தது.

ஏப்ரல் 11 வரை 97 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ஏப்ரல் 22ல் ஒரே நாளில் 22 பேருக்கு தொற்று உறுதியாகி, பாதிப்பு எண்ணிக்கை 100ஐ தாண்டியது. சென்னைக்கு அடுத்தபடியாக அதிக பாதிப்புள்ள மாவட்டமாக இருந்த கோவையில் அடுத்தடுத்த நாட்களில் பாதிப்பு குறையத் தொடங்கியது.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஏப்ரல் 14ஆம் தேதி வரை 27 பேர் குணமடைந்தனர். ஏப்ரல் மாதத்தில் மட்டும் 125 பேர் வரை குணமடைந்தனர். கோவையில் 146 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ஒருவர் உயிரிழந்தார். கடந்த 3ஆம் தேதி கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், குணமடைந்து வீடு திரும்பினார். அவரது குழந்தைக்கும் தொற்று இல்லை என உறுதியானது. வெங்கிட்டாபுரம் பகுதியை சேர்ந்த 3 பேரும் குணமடைந்து வீடு திரும்பினர்.

மே 3ஆம் தேதி கோவையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 146ஆக இருந்த நிலையில், அதன் பின் ஒரு பாதிப்பு கூட பதிவாகவில்லை. இதையடுத்து கொரோனாவை வென்ற கோவை, பாதிப்பு இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது. தமிழக அரசு மற்றும் சுகாதாரத்துறையில் அறிவுறுத்தலின்பேரில் மேற்கொள்ளப்பட்ட தடுப்பு நடவடிக்கைகளால் ஈரோடு, திருப்பூரை தொடர்ந்து கோவை கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளது. இனி வரும் காலங்களிலும் பொதுமக்கள் அரசின் அறிவுரைகளை பின்பற்ற வேண்டுமென கோவை மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

கோவையை தொடர்ந்து நாமக்கல்லும் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 77 பேர் பாதிக்கப்பட்டனர். செவ்வாய்க்கிழமை வரை 62 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். இந்நிலையில், ஒரே நாளில் 15 பேர் குணமடைந்ததால், நாமக்கல் மாவட்டம் கொரோனாவை வென்றுள்ளது. குணமடைந்த 15 பேர் நாமக்கல் அரசு மருத்துவமனையில் இருந்து சிறப்பு வாகனத்தில் அவர்களது வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இதனிடையே சேலம் மாநகரத்திலும் கடந்த 21 நாட்களாக புதிதாக கொரோனா தொற்று இல்லை என்பதால், பச்சைப் பகுதியாக மாறியுள்ளது. ஏற்கெனவே பாதிக்கப்பட்ட 11 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதால், 97 இடங்களில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை அதிகாரிகள் நீக்கியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet