Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

என்னோட மட்டுமில்ல…. அவரோடயும் இரு… அப்பதான் பதவி கிடைக்கும்…

0 Comments

Published on: Saturday, December 14th, 2019 at 2:36 PM

கள்ளக்காதலியின் நிர்வாண வீடியோவைக் காட்டி பணம் பறித்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஒருவர், கட்சியின் முக்கிய நிர்வாகிக்கும் உல்லாச விருந்து படைக்க முயற்சித்ததாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

கடலூர் துறைமுகம் பகுதியைச் சேர்ந்தவர் அம்சவள்ளி. 35 வயதான இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ள நிலையில், இவரது கணவர் சிங்கப்பூரில் வேலைபார்த்து வருகிறார். கணவன் இல்லாமல் தனிமையில் வாடிய அம்சவள்ளியை மயக்கியுள்ளார் வினோத்ராஜ். அதிமுக முன்னாள் கவுன்சிலரான இவர், அம்சவள்ளியுடன் பல நேரங்களில் உல்லாசம் அனுபவித்துள்ளார்.

கணவன் இல்லாத ஏக்கத்தை தீர்த்த வினோத்ராஜுக்கு, சிங்கப்பூரில் இருந்து வரும் பணத்தையும் தாராளமாக செலவு செய்துள்ளார் அம்சவள்ளி. அவரிடம் பணம் இருப்பதை தெரிந்து கொண்ட வினோத்ராஜ், பல இடங்களுக்கு அம்சவள்ளியை அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்ததோடு, படுக்கையில் நிர்வாண கோலத்தில் இருக்கும்போது வீடியோவையும் எடுத்துள்ளார்.

பின்னர் தனது தொழிலுக்கு பணம் தேவைப்படுவதாகக் கூறி, அம்சவள்ளியிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக 81 லட்சம் ரூபாயை கறந்த வினோத்ராஜ், அதை திருப்பித் தராமல் இழுத்தடித்துள்ளார். அம்சவள்ளி பணத்தை திருப்பிக் கேட்டபோது, இருவரும் உல்லாசமாக இருந்த வீடியோவை அவரிடம் காட்டி மிரட்டிய வினோத்ராஜ், அந்த பயத்தை வைத்தே, அம்சவள்ளியை பலமுறை அனுபவித்துள்ளார்.

3 ஆண்டுகளாக இதை வெளியில் சொல்ல முடியாமல் வினோத்ராஜ் கூப்பிடும் நேரமெல்லாம், சென்று மகிழ்வித்துள்ளார் அம்சவள்ளி. இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் மீண்டும் போட்டியிட வேண்டும் எனக் கூறிய வினோத்ராஜ், கடலூரில் உள்ள அதிமுகவின் முக்கிய நிர்வாகியை திருப்திபடுத்தினால், தனக்கு மீண்டும் சீட்டு கிடைக்கும் என அம்சவள்ளியிடம் கூறியுள்ளார். எனவே, அவருடன் சென்று உல்லாசமாக இருக்குமாறும், மறுத்தால், நிர்வாணப் புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிடுவதோடு, அவரது கணவருக்கும் வாட்ஸ் ஆப்பில் அனுப்பிவிடுவேன் என மிரட்டியுள்ளார் வினோத்ராஜ்.

இதனால் அச்சமடைந்த அம்சவள்ளி, வேறுவழியின்றி நடந்த சம்பவங்களை தனது கணவர் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் கடலூர் சொனாங்குப்பம் ஊர் பஞ்சாயத்தை கூட்டி இதற்கு ஒரு தீர்வு காண முயற்சிகள் மேற்கொண்டனர். ஆனால், அதற்கு வினோத்ராஜ் கட்டுப்பட்டு வராததால், கடலூர் மாவட்ட எஸ்.பி. அபினவ் குமாரிடம் அம்சவள்ளி புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், இந்த விவகாரத்தில் அதிமுக நிர்வாகிக்கு மட்டுமின்றி, அமமுக முக்கிய பிரமுகருக்கும் தொடர்பு இருப்பதாகவும், இதனால், இருதரப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியிருப்பதாகவும் கூறியுள்ளனர். அதிமுக பிரமுகர் ஒருவர், குடும்பப் பெண் ஒருவரை பாலியல் ரீதியாக பயன்படுத்தியதோடு, பதவிக்காக அவரை விபச்சாரத்தில் ஈடுபடுத்தவும் முயற்சித்த சம்பவம், கடலூர் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet