0 Comments
Published on: Tuesday, September 8th, 2020 at 9:35 AM
போதைப்பொருள் விவகாரத்தில் நடிகை நிக்கி கல்ராணிக்கு சிக்கல்… அதிர்ச்சியில் திரையுலகம்…
போதை பொருள் விவகாரத்தில் நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தியிருக்கும் சம்பவம், திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னட திரை உலகிலும், பெங்களூருவில் முக்கியமான விருந்து நிகழ்ச்சிகளிலும் போதைப்பொருட்கள் பயன்படுத்திய விவகாரம் தெரியவந்தது. இது தொடர்பாக விசாரனை மேற்கொண்ட அதிகாரிகள், நடிகை ராகிணி திவேதி, அவரது நண்பர் ரவிசங்கர், நடிகை சஞ்சனா கல்ராணியின் நண்பர் ராகுல், போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த வீரேன் கண்ணா, ஆப்பிரிக்கா நாட்டைச் சேர்ந்த லோயம் பெப்பர் சம்பா ஆகியோரை கைது செய்தனர்.
இந்நிலையில், தமிழில் பிரபல நடிகையான நிக்கி கல்ராணியின் சகோதரியான சஞ்சனா கல்ராணியின் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதையடுத்து, அவர் கைது செய்யப்படவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இது நிக்கி கல்ராணிக்கும் சிக்கலை கொடுக்கும் என திரையுலகினர் தெரிவித்து வருகின்றனர்.
No comments yet