Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

அடப்பாவமே…! அரக்கு நிற பட்டுப்புடவையில் அசத்திய நயன்தாராவை திட்டித்தீர்க்கும் நெட்டிசன்ஸ்… காரணம் இதுதான்..!

1 Comments

Published on: Monday, January 6th, 2020 at 6:19 PM

ஜீ தமிழ் சினி விருது விழாவில் நடிகை நயன்தாரா, அரக்கு நிற பட்டுப்புடவையில் அசத்தலாக பங்கேற்ற நிலையில், சமூகவலைதளத்தில் பலரும் அவரை கடுமையாக திட்டி வருகின்றனர்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சினி அவார்ட்ஸ் விருது வழங்கும் விழா சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் கமல், தனுஷ், யோகிபாபு, ஸ்ருதிஹாசன், சமந்தா என பலரும் கலந்து கொண்ட நிலையில், தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியான நயன்தாராவும், அரக்கு நிற பட்டுப்புடவையில் வந்து பங்கேற்றார்.

இவ்விழாவில் நடிகை நயன் தாராவுக்கு 2019ஆம் ஆண்டின் சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்களில் சமூகவலைதளங்கில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. வழக்கமான தான் நடிக்கும் படங்களின் புரொமோசன் விழாக்களில் பங்கேற்காமல் அதை தவிர்த்து வரும் நயன்தாரா, விருது விழாவில் பங்கேற்றதுதான் பலரின் கோபத்திற்கு காரணமாக உள்ளது.

விஸ்வாசம், பிகில், தர்பார் என எந்த படமாக இருந்தாலும், நடித்து முடித்ததோடு, தனது வேலை முடிந்துவிட்டது என்பதுபோல், பேசிய சம்பளத்தை வாங்கிக் கொண்டு ஒதுங்கிவிடும் நயன் தாரா, விருது விழாவை மட்டும் தவிர்க்காமல் கலந்து கொண்டதை கலாய்த்துள்ளனர்.

படங்களில் நடிப்பதால்தான் உங்களுக்கு விருது கிடைக்கிறது. ஆனால், அந்த படங்களின் புரொமோசன், ஆடியோ லாஞ்சுக்கு வராமல், அந்த படங்களின் மூலம் கிடைக்கும் விருதை வாங்க மட்டும் வருகிறீர்களே… நியாயமா? என பலரும் நியாயமாக கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த நிகழ்ச்சிக்கெல்லாம் வர முடியுது, தர்பார் நிகழ்ச்சிக்கு வர முடியவில்லையா? என ரஜினி ரசிகர் ஒருவர், நயன்தாராவுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1COMMENTS