0 Comments
Published on: Monday, August 3rd, 2020 at 6:58 PM
அண்ணாத்தே சேதி… விஜய் சேதுபதி படத்தின் அட்டகாசமான பாடல்…
விஜய் சேதுபதி நடிப்பில் துக்ளக் தர்பார் திரைப்படத்திலிருந்து வெளியான முதல் பாடலை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
டெல்லி பிரசாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் துக்ளர் தர்பார். இந்த படத்தில் முதல் பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தில் பாடலின் துவக்கத்தில் விஜய்சேதுபதியின் வசனங்கள் இடம்பெற்றுள்ளது. அண்மையில் ராப் பாடல் மூலம் புகழ் பெற்ற அறிவு இந்த பாடலை பாடியுள்ளார். அண்ணாத்தே சேதி என்ற இந்த பாடலை கார்த்திக் நேத்தா எழுதியுள்ளார். இந்த பாடலை விஜய் சேதுபதியின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
No comments yet