Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

50க்கும் மேற்பட்ட சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட லுத்ரன் சர்ச் பள்ளியின் தாளாளர்…

0 Comments

Published on: Friday, March 1st, 2019 at 8:30 PM

திருச்சி சமயபுரம் அருகே ஏழை குழந்தைகளுக்கு விடுதியுடன் இலவச கல்வி தருவதாக ஆசைவார்த்தை கூறி அழைத்துச் சென்று 50க்கும் மேற்பட்ட சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட லுத்ரன் சர்ச் பள்ளியின் தாளாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்

இவர்கள் அனைவரும் , திருச்சி சமயபுரம் அடுத்த சிறுகனூர் லத்வியான் இவாஞ்சலின் லுத்ரன் சர்ச் பள்ளிக்கூடத்தில் தங்கி படித்து வந்த ஏழை மாணவிகள்..!

அரசு நிதி உதவியுடன் நடைபெறும் இந்த துவக்க பள்ளியில் 53 ஏழை எளிய மாணவ, மாணவிகள் படித்து வந்தனர். இவர்கள் அனைவரும் கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பின் தங்கிய கிராமங்களை சேர்ந்தவர்கள்.

வீடு வீடாக சென்று லத்வியான் இவாஞ்சலின் லுத்ரன் சர்ச் நிர்வாகம் இலவச கல்வி வழங்குவதாக கூறி ஏழை பெற்றோரை மூளைசலவை செய்து சிறுமிகளை இங்கு அழைத்து வந்துள்ளனர். 5 ஆம் வகுப்புக்கு மேல் படிக்கின்ற சகோதர, சகோதரிகள் இருந்தால் அவர்களையும் அழைத்து வந்து தங்கும் விடுதியில் தங்க வைத்து அருகில் உள்ள அரசு பள்ளியில் சேர்த்து விட்டதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் தான் பள்ளியின் தாளாளரான தர்மராஜன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக மாணவிகள் புகார் அளித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் தனது தந்தைக்கு தெரிவிக்க அவர் நேரில் வந்து விசாரித்த போது தர்மராஜனின் கொடுமையில் சிக்கி சிறுமிகள் தவிப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

காவல்துறையினர் புகாரை விசாரிக்க மறுத்த நிலையில் பெற்றோர்களின் முற்றுகை போராட்டத்தால் பள்ளிக்கு வந்த சமூக பாதுகாப்பு நலத்திட்ட அதிகாரிகளின் விசாரணையில் தாளாளர் தர்மராஜன் தடம் மாறியது உறுதி செய்யப்பட்டது. கடந்த 40 வருடங்களாக செயல்பட்டு வரும் இந்த பள்ளியில் கடந்த 2012 ஆம் ஆண்டு தாளாளராக ஓய்வு பெற்ற ஆசிரியரான தர்மராஜன் பணிக்கு சேர்ந்துள்ளார். அவர் வறுமையில் உள்ள சிறுமிகளை தனிமையில் அழைத்து இனிப்பு வழங்குவது கதைகள் கூறுவது போல அத்துமீறலில் ஈடுபட்டதாக மாணவிகள் புகாரில் தெரிவித்துள்ளனர்.

தனது மகளுக்கு நேர்ந்த கொடுமையை சமூக நலப்பாதுகாப்பு திட்ட அதிகாரிகளிடம் முழுமையாக சொல்ல இயலாமல் கண்ணீர் விட்டு கதறியது பரிதாபமாக இருந்தது

சிறுகனூர் காவல் ஆய்வாளர் ராஜாவின் மெத்தனமான நடவடிக்கையால், பள்ளி தாளாளர் தர்மராஜன் தலைமறைவானதாக கூறப்படுகிறது. தற்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், தர்மராஜனை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

முன்னதாக தங்கும் விடுதியில் இருந்த அனைத்து குழந்தைகளும் அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். காப்பகம் இழுத்து பூட்டப்பட்டது. இதனால் 53 பேர் படித்து வந்த அரசு உதவி பெறும் லத்வியான் இவாஞ்சலின் லுத்ரன் சர்ச் உண்டு உறைவிட பள்ளிக்கூடம், ஒரு மாணவ ,மாணவிகளும் இல்லாமல் காலியானது..!

அதே நேரத்தில் இது குறித்த தகவல் தெரியாமல், மருத்துவ விடுப்பு முடிந்து பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியை இமாகுலேட் மாணவ மாணவிகள் இல்லாத பள்ளியில் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து நிற்பதாக விளக்கம் அளித்துள்ளார்

தூய உள்ளத்துடன் செய்ய வேண்டிய கல்வி சேவையில் தாளாளர் தர்மராஜன் போன்ற கெட்ட சிந்தனை உள்ளோர் பொறுப்பேற்றால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த சம்பவமே சான்று.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet