Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது….

0 Comments

Published on: Tuesday, February 26th, 2019 at 7:32 PM

கிரேனடாவில் நடக்க இருந்த வெஸ்ட் இண்டீஸ் – இங்கிலாந்து இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழையால் கைவிடப்பட்டது.

வெஸ்ட் இண்டீஸ் – இங்கிலாந்து இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. பிரிட்ஜ்டவுனில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் 3-வது போட்டி கிரேனடாவில் நேற்றிரவு நடைபெறுவதாக இருந்தது. இதற்கான டாஸும் சுண்டப்பட்டது. இங்கிலாந்து டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது. போட்டி தொடங்குவதற்கு முன் மழை பெய்தது.

போட்டியை நடத்த முடியாத அளவிற்கு மழை பெய்ததால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ஆட்டம் கைவிடப்பட்டது. 4-வது ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet