Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

பொண்ணுக்கு வயது 24 தான்… ஆனா ஏமாந்த இளைஞர்கள் எத்தனை பேர் தெரியுமா?

0 Comments

Published on: Thursday, January 9th, 2020 at 2:04 PM

உல்லாச வாழ்க்கை வாழ்வதற்காக பல இளைஞர்களை மோசடி செய்த இளம்பெண்ணை, பாதிக்கபப்ட்டவர்கள் ஒன்றாக சேர்ந்து கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் இரும்பாலை காவல்நிலையத்திற்கு செவ்வாய் இரவு 10 மணியளவில் விஜயகுமாரி் என்பவர் தொடர்பு கொண்டு தனது மகளையும் கணவரையும் சிலர் கடத்திச் சென்றுவிட்டதாக புகார் அளித்தார். உடனடியாக அவரது மகள் செல்போனுக்குத் தொடர்பு கொண்ட போலீசார், காரில் இருந்த நபர்களை உடனடியாக காவல்நிலையம் வரும்படி அழைத்தனர்.

கடத்தப்பட்டதாக கூறப்பட்ட இருவரும் அவர்களைக் கடத்தியதாக கூறப்பட்ட நபர்களும் சேலம் மாநகர காவல் ஆணையரகத்திற்கு செவ்வாய் இரவு 12 மணியளவில் வந்து சேர்ந்தனர். அப்போது கடத்தல்காரர்களை பிடித்து  போலீசார் நடத்திய விசாரணையில் பகீர் தகவல்கள் வெளியாகின.

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அடுத்த கழனிக் கோட்டையைச் சேர்ந்தவர்கள் காளிமுத்து – விஜயகுமாரி தம்பதி. இவர்களது மகளான 24 வயது டிம்பிள்ஷியா, சென்னையில் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் மாதம் ரூ.20 ஆயிரம் சம்பளத்தில் பணியாற்றி வருகிறார்.

குறைந்த சம்பளம் வாங்கும் டிம்பிள்ஷியா, விரைவில் பணம் சேர்க்க வேண்டும் என்ற ஆசையில், தனது காளிமுத்து, காதலன் விக்னேஷ் ஆகியோரை கூட்டு சேர்த்துக் கொண்டு,  விமான நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளைஞர்களுக்கு வலை விரித்துள்ளனர்.

விமான நிறுவனத்தில் தான் வேலைபார்ப்பதை கூறி, அதேபோல் உங்களுக்கு வேலை வேண்டுமா? ஆரம்பத்திலேயே லட்சங்களில் சம்பளம் என புருடா விட்டுள்ளார் டிம்பிள்ஷியா. மேலும், வேலை வேண்டும் என்றால் ரூ.2 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை பணம் செலுத்த வேண்டும் எனக் கூறி லட்சக்கணக்கில் வசூலித்ததாகக் கூறப்படுகிறது.

அய்யோ கப்பல்ல வேலை… பத்தாயிரம் சம்பளம்… என்ற கவுண்டமணி கணக்கில் விமான நிறுவனத்தில் வேலை… அழகான பொண்ணுகள் என கனவு கண்ட 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள், டிம்பிள்ஷியாவிடம் ரொக்கமாக பணத்தை கொடுத்துள்ளனர். ஒரு சிலர் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தியுள்ளனர். ஒருகட்டத்தில் வேலையும் வாங்கித் தராமல், பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் டிம்பிள்ஷியா கோஷ்டி டிமிக்கி கொடுத்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள், டிம்பிளைத்  தேடி வந்த நிலையில், சேலம் நகரில் உள்ள உறவினர் வீட்டில் வைத்து செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தை நடத்தலாம் என அழைப்பு வந்துள்ளது. பேச்சுவார்த்தை நீண்டு கொண்டே போனதால் காவல்நிலையம் செல்லலாம் என பாதிக்கப்பட்டவர்கள், டிம்பிளையும் அவரது தந்தையையும் காரில் ஏற்றி அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

அவர்களது கார் புறப்பட்ட சிறிதுநேரத்தில் டிம்பிளின் தாயார், காவல்நிலையத்தை தொடர்பு கொண்டு தன் மகளும் கணவரும் கடத்தப்பட்டதாக புகார் அளித்துள்ளார். காளிமுத்து,  அவரது மகள் டிம்பிள் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, 3 மாதங்களில் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுத்து விடுவதாக சொன்னதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஆனால்,தங்களிடம் வாங்கிய பணத்தில்தான் காளிமுத்துவும் டிம்பிளும் சொகுசு கார் வாங்கியதாகவும், கழனிக் கோட்டையில் பங்களா கட்டியதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் பணம் கொடுத்த ஒரு நபரிடம் தான் டிம்பிள் பேசும் ஆடியோவையும் வெளியிட்டுள்ளனர்.

இதையடுத்து, டிம்பிள்ஷியா  மீது வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்த போலீசார், அவரது தந்தை மற்றும் காதலனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet