Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

பப்ஜி விளையாட்டால் விபரீதம் – தொடர்ந்து விளையாடியதால் மாரடைப்பால் உயிரிழந்த சிறுவன்…

0 Comments

Published on: Tuesday, May 19th, 2020 at 8:05 PM

பப்ஜி விளையாட்டால் விபரீதம் – தொடர்ந்து விளையாடியதால் மாரடைப்பால் உயிரிழந்த சிறுவன்…

ஈரோட்டில் தொடர்ந்து செல்போனில் பப்ஜி கேம் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தில் உள்ள கமலா நகரைச் சேர்ந்த 16 வயது சிறுவன், 10ஆம் வகுப்பு முடித்துவிட்டு, பாலிடெக்னிக்கில் படித்து வந்தார். தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால், பாலிடெக்னிக் கல்லூரி திறக்கப்படவில்லை. இதனால், சக சிறுவர்களோடு சேர்ந்து விளையாடாமல், எப்போதும் செல்போனில் பப்ஜி விளையாடுவதிலேயே பொழுதை கழித்துள்ளார்.

பெரும்பாலான நேரங்களில் பப்ஜி விளையாட்டிலேயே மூழ்கியிருந்த சிறுவன், இன்று வீட்டின் அருகே உள்ள திடலில் அமர்ந்து தீவிரமாக பப்ஜி விளையாடியுள்ளார். அப்போது திடீரென மயங்கி விழுந்ததை, அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் பார்த்து, பெற்றோருக்கு தகவல் சொல்லியுள்ளனர்.

உடனடியாக, சிறுவனை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் ஏற்கெனவே மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், சிறுவனுக்கு மாரடைப்பு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

பப்ஜி விளையாட்டின்போது, எப்படியாவது வெற்றிபெற்றாக வேண்டும் என அழுத்தத்தோடு விளையாடியதால், இந்த மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet