Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

யோகிபாபு, கேத்ரின் தெரசா… ஏமாந்து போன தயாரிப்பாளர்கள்…!

0 Comments

Published on: Wednesday, January 8th, 2020 at 10:38 AM

காமெடி நடிகர் யோகி பாபுவிடம் கால்ஷீட் வாங்கித்தருவதாக கூறி, சினிமா தயாரிப்பாளர் ஒருவரிடம் ரூ. 10 லட்சம் மோசடி செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு, திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாம்பரம் அடுத்த சிட்லபாக்கத்தை சேர்ந்தவர் போஸ். இவரது நண்பர் ரவிச்சந்திரன். சினிமா தயாரிப்பாளர்களான இவர்கள் “அலிபாபாவும் 40 குழந்தைகளும்” என்ற பெயரில் படம் ஒன்றை எடுக்க முடிவு செய்திருந்தனர். இதற்காக நடிகர், நடிகைகள் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்த படத்தில் நடிகர் யோகி பாபு மற்றும் நடிகை கேத்ரின் தெரசா ஆகியோரை நடிக்க வைக்கலாம் என தயாரிப்பாளர்கள் முடிவு செய்தனர்.

அவர்களின் கால்சீட் பெறுவதற்காக சினிமா துறையில் அறிமுகமான வடபழனி என்.ஜி.ஓ. காலனியில் அலுவலகம் நடத்தி வரும் சினிமா பிரமுகர் அண்ணாதுரையை தயாரிப்பாளர்களான போஸ், ரவிச்சந்திரன் அணுகி உள்ளார். அவர், தனக்கு சினிமாவில் தெரியாத ஆட்களே இல்லை என அளந்துவிட்டுள்ளார். யோகி பாபு கால்ஷீட் வாங்குறது ரொம்ப ஈஸி என்று கூறிய அவரது பேச்சை இருவரும் நம்பியுள்ளன.

தனது பொய்களை இருவரும் நம்பிவிட்டதை உணர்ந்த அண்ணாதுரை, யோகிபாபு மற்றும் கேத்ரின் தெரசா ஆகிய இருவரின் கால்சீட் வாங்குவதற்கு ரூ.30 லட்சம் வரை பணம் தேவைப்படும் என்று கூறியதாக தெரிகிறது. முதல்கட்டமாக ரூ.10 லட்சம் தரும்படியும் கேட்டுள்ளார். அண்ணாதுரை அலுவலகத்தில் வைத்து ரூ. 10 லட்சத்திற்கான காசோலையை தயாரிப்பாளர்கள் இருவரும் கொடுத்துள்ளனர்.

பணம் பெற்றுக்கொண்ட அண்ணாதுரை இதுவரை நடிகர்களின் கால்சீட் வாங்கி கொடுக்காமலும் பணத்தையும் திருப்பி தராமல் இருந்து வந்துள்ளதாக தெரிகிறது. இதனால் ஏமாற்றமடைந்த போஸ் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வடபழனி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet