Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

பக்கத்து வீட்டுக்கு டிவி பார்க்கப் போன +1 மாணவி… மயக்க மருந்து கொடுத்து சீரழித்த டிவி மெக்கானிக்…!

0 Comments

Published on: Thursday, December 19th, 2019 at 11:03 PM

வீட்டில் டிவி ரிப்பேர் ஆனதால், பக்கத்து வீட்டுக்குச் சென்று டிவி பார்த்த பிளஸ்  1 மாணவியை, டிவி மெக்கானிக் ஒருவர், குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து, பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

தூத்துக்குடி அருகே 16 வயது மாணவிக்கு இறந்து பிறந்த குழந்தையை வீட்டின் பின்புறம் புதைத்த விவகாரம் போலீசாருக்கு தெரியவந்தது. மாணவியிடமும், அவரது பெற்றோரிடமும் இது குறித்து போலீசார் விசாரித்தபோதுதான், டிவி மெக்கானிக் ஒருவர் மாணவியை சீரழித்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் பகுதியைச் சேர்ந்தவன் 50 வயதான ராஜீவ். டிவி மெக்கானிக்காக பணியாற்றி வருகிறான். இவனது பக்கத்து வீட்டில் வசிக்கும் 11ஆம் மாணவி பார்க்க அழகாக இருப்பார். இதனால், அவர் மீது எப்போதும் ஒரு கண்ணாக இருந்துள்ளான் ராஜீவ். கடந்த  சில மாதங்களுக்கு முன்பு மாணவியின் வீட்டில் இருந்த டிவி ரிப்பேர் ஆகியுள்ளது. அதை சரி செய்யச் சொல்லி, ராஜீவிடம் கொடுத்தனர்.

இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ராஜீவ், டிவியை சரி செய்து தரும் வரை, தனது வீட்டில் வந்து டிவி பார்க்குமாறு, மாணவியிடம் கூறியுள்ளான். மாணவிக்கு சில நிகழ்ச்சிகளில் விருப்பம் இருந்ததால், ராஜீவ் கூறியதைக் கேட்டு, அவன் வீட்டுக்குச் சென்று டிவி பார்த்துள்ளார். ஒருநாள் விடுமுறை நாளில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், ராஜீவ் வீட்டிற்கு மாணவி டிவி பார்க்கச் சென்றார். அப்போது, சர்பத் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளான் ராஜீவ்.

அதை குடித்த சிறிது நேரத்தில் மாணவி மயங்கிவிட்டதால், அவரது உடைகளை களைந்து, கற்பழித்துள்ளான். அப்போதும் மாணவிக்கு மயக்கம் தெளியாததால், காமவெறியில் இருந்த ராஜீவ் மீண்டும் ஒருமுறை மாணவியை அனுபவித்துள்ளான். பின்னர், மாணவிக்கு உடையை மீண்டும் அணிவித்த ராஜீவ், வீட்டில் இருந்து வெளியே சென்றுவிட்டான்.

சிறிதுநேரத்தில் மயக்கம் தெளிந்த மாணவி, டிவி பார்த்துக் கொண்டே தூங்கி விட்டதாக கருதி, வீட்டுக்குச் சென்று எப்போதும் போல சாதாரணமாக இருந்துள்ளார். இது நடந்து சில மாதங்களில் மாணவியின் வயிறு வீங்க ஆரம்பித்துள்ளது. அதே நேரத்தில் மாதவிடாயும் நின்றுள்ளது. இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாத மாணவி, வயிறு வலிக்கிறது என அடிக்கடி கூறியதைக் கேட்டு, மெடிக்கல் கடையில் மருந்து, மாத்திரை வாங்கிக் கொடுத்துள்ளனர் பெற்றோர்.

இருப்பினும், நாளுக்கு நாள் வலி அதிகமாகி வந்ததால், மருத்துவர் ஒருவரிடம் சென்றபோது, மாணவி கர்ப்பமாக இருப்பதாக அவர் கூறியதைக் கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். கர்ப்பமாகி ஒரு சில மாதங்கள் தான் இருக்கும் என கருதிய பெற்றோர், மருந்துக் கடையில் கர்ப்பம் கலைப்பதற்கான மாத்திரையை வாங்கி மாணவிக்கு கொடுத்தனர். இதனால், அன்றிரவு மாணவிக்கு வயிற்று வலி அதிகமாகி அழுது துடித்துள்ளார். அவரை, பக்கத்து தெருவில் இருந்த சகோதரி வீட்டிற்கு அழைத்துச் சென்ற சிறிது நேரத்தில், 6 மாத சிசு உயிரிழந்த நிலையில் பிறந்துள்ளது.

வெளியே தெரிந்தால் மானம் போய்விடும் என கருதிய பெற்றோர், அந்த சிசுவை வீட்டின் பின்புறம் காலியாக இருந்த இடத்தில் குழிதோண்டி புதைத்தனர். ஆனால், மாணவி வலியால் அலறி துடித்ததைக் கேட்டுக் கொண்டிருந்த அக்கம்பக்கத்தினர், சிசுவை புதைப்பதையும் பார்த்துள்ளனர். அவர்கள் கொடுத்த ரகசிய தகவலின் பேரிலேயே போலீசார் விசாரணையை முன்னெடுத்தனர்.

யார் தன்னை கற்பழித்தார்கள் என மாணவிக்கு தெரியாததால், அவர் யார் யாருடன் பழகுவார்… எங்கெங்கு செல்வார் என போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர். அப்போதுதான், பக்கத்து வீட்டில் குடியிருக்கும் டிவி மெக்கானிக் ராஜீவ் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவதையும், ஒருநாள் அங்கேயே தூங்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார் மாணவி. டிவி மெக்கானிக்கை பிடித்து விசாரித்தபோது, மாணவியை சீரழித்ததை அவன் ஒப்புக்கொண்டான். அவனை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார், மாணவிக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், சிசுவை புதைத்தது தொடர்பாக, மாணவியின் பெற்றோரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet