Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

ஹெல்மெட் போடாமல் கார் ஓட்டலாமா..? அபராத ரசீது அனுப்பிய போலீஸ்…

0 Comments

Published on: Tuesday, September 3rd, 2019 at 11:46 AM

சொகுசு கார் பதிவெண்ணுக்கு ஹெல்மெட் அபராத ரசீது அனுப்பிய போலீசார் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் காரின் உரிமையாளர் புகார் அளித்துள்ளார்.

இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிவது கட்டாயம், மது குடித்து வாகனம் ஓட்டக்கூடாது, சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டக்கூடாது என பல்வேறு சட்டங்கள் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் அந்த அபராதமும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. கேமரா மூலமாக கண்காணித்தும் அபராதம் விதிக்கப்படுவதால், பெரும்பாலான வாகன ஓட்டிகள் விதி மீறலை குறைத்துள்ளனர். ஆனால் அபராதம் விதிப்பதில் ஏகப்பட்ட குளறுபடிகள்.

சென்னை கொட்டிவாக்கம் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் பரணீஷ்வரன். இவர் தனது மனைவி நந்தினி பெயரில் சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். இவருக்கு கடந்த 25ஆம் தேதி போக்குவரத்து காவல்துறையிடமிருந்து குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றதால் 100 ரூபாய் அபராதம் செலுத்தும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அந்த குறுஞ்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்த வாகன பதிவு எண் அவரது சொகுசு காரின் வாகன பதிவு எண் என்பதை கண்டு குழப்பமடைந்த பரமேஸ்வரன் உடனடியாக யானைக்கவுனி போக்குவரத்து காவல் நிலையத்திற்கு சென்றார்.

சம்பவ நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ள தேதியன்று தானோ, தனது வாகனமோ வெளியே செல்லவில்லை என்றும், மேலும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ள வாகன பதிவு எண் தனது கார் என்றும் தெரிவித்துள்ளார். போலீசார் விசாரிப்பதாக கூறியிருந்த நிலையில் மீண்டும் தபால் மூலம் அபராத தொகை செலுத்துமாறு மற்றொரு நினைவூட்டல் ரசீது வீட்டிற்கு சென்றுள்ளது.

இதை அடுத்து பரணீஷ்வரன் -நந்தினி தம்பதியினர் சனிக்கிழமை பிற்பகல் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். பின்னர் பேசிய அவர்கள், நூறு ரூபாய் என்பது சிறிய அபராதத் தொகைதான் என்றாலும், வேறு ஏதேனும் குற்ற சம்பவங்களில் கார் எண்ணை குறிப்பிட்டிருந்தால், தங்கள் நிலைமை என்னவாகும் என கேள்வி எழுப்பினர்.

புகாரை பெற்றுக்கொண்ட போலீசார், விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதித்து விதி மீறலை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தும் காவல்துறையினர், விதிகளை முறையாக பின்பற்றுவபவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கக்கூடாது என வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet