Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் ‘இந்தியன் 2’ படத்தில் நடிக்க ஆர்.ஜே. பாலாஜி ஒப்பந்தம்…

1 Comments

Published on: Friday, February 15th, 2019 at 10:54 AM

‘இந்தியன் 2’ படத்தில் ‘எல்.கே.ஜி’ படத்தில் முக்கிய அரசியல் பிரமுகராக நடித்திருக்கும் ஆர்.ஜே. பாலாஜி ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 18-ந் தேதி தொடங்கியது. அதன் அடுத்தகட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. கமல்ஹாசனுடன் நடிக்க காஜல் அகர்வால், டெல்லி கணேஷ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த படத்தில் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்துக்கு அக்‌‌ஷய் குமார், அஜய் தேவ்கன், அபிஷேக் பச்சன் உள்ளிட்ட பலரை ‌ஷங்கர் அணுகியதாக தகவல் வெளியானது. ஆனால் இதுவரை யாருமே அந்த கதாபாத்திரத்துக்கு ஒப்பந்தம் செய்யப்படவில்லை. தற்போது கமலுக்கு வில்லனாக நடிக்க அஜய் தேவ்கன் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சேனாதிபதியைப் பிடிக்க முயலும் போலீஸ் கேரக்டர் வேடத்தில் நடித்த நெடுமுடி வேணுவும் அதே வேடத்தில் இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார். நெடுமுடி வேணுவின் உதவியாளராக இருக்கும் போலீஸ் கேரக்டரில் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 22ம் தேதி ரிலீஸாகவிருக்கும் ’எல்.கே.ஜி’ படத்தில் தமிழக அரசியல் நிலவரங்களை ஒரு பிடி பிடித்திருக்கிறாராம் பாலாஜி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1COMMENTS