Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

வெளியானது பார் நாகராஜ் வீடியோ – கைது செய்ய தயங்கும் காவல்துறை…

0 Comments

Published on: Thursday, March 14th, 2019 at 8:43 PM

பொள்ளாச்சி பாலியல் வன்கொடூர விவகாரத்தில் மேலும் 3 புதிய வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. வெளிவந்துள்ள புதிய வீடியோவில் பார் நாகராஜ் இருப்பது தெரியவந்துள்ளது.

பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணன் கொடுத்த புகாரால் தான் திருநாவுக்கரசு மற்றும் அவனது கூட்டாளிகள் பிடிபட்டனர். இதனால் கோபம் அடைந்த பார் நாகராஜ், காவல் நிலையத்தில் புகார் கொடுத்த பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனை தாக்கினான்.

இது தொடர்பாக, பார் நாகராஜ் கைது செய்யப்பட்ட அன்றே, பெரும் புள்ளிகள் தங்களது அதிகாரம் பயன்படுத்தி பார் நாகராஜை வெளியிட செய்துள்ளனர் என்ற தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் பார் நாகராஜ் நடத்தி வந்த மதுபான பாரை நேற்று அப்பகுதி மக்கள் அடித்து நொறுங்கி, ஆத்திரத்தை வெளிப்படுத்தினர்.

இதற்கிடையில், இரண்டு பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருக்கும் 3 வீடியோ வெளியாகி உள்ளது. தன்னுடையை ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணை பார் நாகராஜ் மிரட்டும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. வீடியோ வெளிவந்த பிறகும், இதுவரை அவரை போலீசார் கைது செய்யவே இல்லை.

பொள்ளாச்சி அதிமுக நிர்வாகியாக இருந்த பார் நாகராஜை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டாலும், அவருக்கு பக்க பலமாக இருப்பது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. காரணம் இதுவரை பார் நாகராஜ் மீது வழக்கும் பதியவில்லை.

பார் நாகராஜ் இரு பெண்களிடம் மிரட்டி தவறுதலாக இருந்த அந்த காட்சியை, அவனது நண்பர்கள் சபரிநாதன் மற்றும் சதீஷ் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். இவர்கள் இருவரும் வீடியோ எடுத்துள்ளது அந்த பெண்களுக்கு தெரியவில்லை. அதுமட்டுமல்லாமல், இந்த இரண்டு பெண்களும் முகநூல் மூலமாக நட்பாக பழகியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வெளியாகி உள்ள மூன்று வீடியோக்களில் ஒன்று சின்னப்பம்பாளையத்தில் உள்ள திருநாவுக்கரசு வீட்டில் எடுக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் என்னென்ன கேவலங்கள் இருக்கின்றதோ..?

ஆனால் இன்றும் வெளியில் தான் உள்ளான் பார் நாகராஜ். காரணம் அரசியல் பலமா..? அல்லது பண பலமா..? அல்லது அரசியல் பெரும் புள்ளிகளுக்கே இதில் தொடர்பு இருக்கிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet