Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

வாங்கித் தின்ற நண்பர்களே செய்த வேலை… உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, கம்பி எண்ணும் மாணவர்கள்…

0 Comments

Published on: Tuesday, September 3rd, 2019 at 11:33 AM

வேலூரில் உல்லாச வாழ்க்கைக்காக 3 கோடி ரூபாய் பணம் கேட்டு சக மாணவனை அவரது நண்பர்களே கடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாணவனை மீட்ட போலீசார், கடத்தலில் ஈடுபட்ட 3 மாணவர்களை கைது செய்தனர்.

வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி வேளாளர் தெருவைச் சேர்ந்தவர் கென்னடி. இவர் வெளிநாட்டில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மற்றும் 19 வயதனான மகன் கோகுல் சத்துவாச்சாரியில் வசித்து வருகின்றனர். லத்தேரி அருகிலுள்ள என்.டி.டி.எப். தனியார் தொழில்நுட்ப கல்லூரியில் கோகுல் பயின்று வருகிறார்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை கல்லூரிக்கு சென்ற கோகுல் வீடுதிரும்பவில்லை. மாலையில் கோகுலின் தாயாரை தொடர்புகொண்ட அடையாளம் தெரியாத நபர்கள். உங்கள் மகனை கடத்தி விட்டதாகவும் ரூ.3 கோடி பணம் தந்தால் விட்டுவிடுவோம் இல்லையென்றால் கொலை செய்துவிடுவோம் என்றும் மிரட்டினார்.

உடனடியாக அவ்வளவு பணத்தை தாயார் செய்ய முடியாது என்றும் மகனை பேசச் சொல்லுமாறும் கடத்தல் நபர்களிடம் கோகுலின் தாயார் கெஞ்சினார். கோகுலின் தாயார் உடனடியாக சத்துவாச்சாரி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அவர்கள் தனிப்படை அமைத்து, மாணவனின் தாயாருக்கு சில அறிவுரைகளை வழங்கினர். அவர்கள் அறிவுறுத்தல்படி, பணத்தை குறைத்துக்கொள்ளுமாறு கோகுலின் தாயார் கேட்டார். ரூ.3 கோடி கேட்ட கும்பல் 5 லட்சம் ரூபாயாவது தருமாறு இறங்கி வந்தனர்.

இதனையடுத்து தனிப்படையினர் கட்டுகட்டாக வெள்ளை பேப்பர்களை கட்டி பணம் இருப்பதை போல் ஒரு பேக்கை உருவாக்கினர். அந்த பேக்கை, வள்ளிமலை அருகில் அவர்கள் சொன்ன இடத்தில் வைத்துவிட்டு கோகுலின் தாயார் காத்திருந்தார். அங்கு வந்த அந்த கும்பல், பணத்தை எடுத்துக்கொண்டு மாணவனை விடுவித்தது.

இதை அடுத்து மறைந்திருந்த போலீசார் அந்த கடத்தல் கும்பலைச் சேர்ந்த 4 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கோகுலை கடத்தியவர்கள், அவருடன் பொறியியல் கல்லூரியில் படிக்கும் சுதர்சன் உள்ளிட்ட மாணவர்கள் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், வெளிநாட்டிலிருந்து தந்தை அனுப்பும் பணத்தில் கோகுல் சக மாணவர்களுக்கு தாராளமாக செலவு செய்ததுடன் உல்லாசமாக இருந்துள்ளார். அதனைப் பார்த்த சுதர்சன் உள்ளிட்ட 4 பேரும் உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டுள்ளனர். அதற்காக கோகுலை கடத்தி பணம் பறிப்பது என முடிவு செய்துள்ளனர்.

கல்லூரி முடிந்ததும் வெளியில் செல்லலாம் என கோகுலை 4 பேரும் அழைத்துள்ளனர். ஒரு காரில் கோகுலை ஏற்றிக்கொண்டு சென்ற அவர்கள், வள்ளிமலை அருகில் உள்ள ஒரு வீட்டிற்கு சென்றனர். அங்கு சென்றதும் கோகுலின் கை, கால்களை கட்டிப் போட்டனர். பின்னர் கோகுலின் தாயை தொடர்புகொண்டு பணம் கேட்டு மிரட்டியது விசாரணையில் தெரியவந்தது.

இதை அடுத்து 4 பேரையும் கைது செய்த சத்துவாச்சாரி போலீசார், கடத்தலில் யாருக்கும் தொடர்புள்ளதா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உல்லாச வாழ்க்கைக்காக சக மாணவனை நண்பர்களே கடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet