Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

வறுமையின் உச்சம் – மண்ணை சாப்பிடும் மக்கள்…

0 Comments

Published on: Saturday, March 9th, 2019 at 9:31 PM

கடும் வறட்சியும், வறுமையும் நிலவுவதால், பசியை போக்குவதற்காக, உணவுக்குப் பதிலாக மக்கள் மண்ணை ரொட்டியாக செய்து சாப்பிடும் அவலம் அரங்கேறியுள்ளது.

அமெரிக்க கண்டத்திலேயே மிகவும் ஏழ்மையாக நாடாக இருப்பது ஹைத்தி. இங்குள்ள மக்கள் பெரும்பாலானோர் ஊட்டச்சத்து குறைப்பாட்டால் மிகக் குறைந்த வயதிலேயே உயிரிழந்து வருகின்றனர். இங்கு கடும் வறட்சி நிலவுவதால், அரிசி, காய்கறி என எதையும் விளைவிக்க முடியவில்லை.

அதேநேரத்தில் அங்குள்ள பொதுமக்களுக்கு போதிய வருமானம் இல்லாததால், வெளியில் இருந்து கொண்டுவரப்படும் உணவுகளையும் அவர்களால் வாங்க முடியவில்லை.

ஆனால், வயிறு என்பது ஒன்று இருந்து, அதில் பசியும் இருப்பதால், கிடைத்ததை எல்லாம் சாப்பிட்டு உயிர் வாழப் பழகிக் கொண்டனர் ஹைத்தி மக்கள். அந்த வகையில் ஒரு வகை மண்ணை, தண்ணீர் ஊற்றி களிபோல் பிசைந்து, அதை ரொட்டி போல் தயாரித்து, அதையே உணவாக உண்ணும் அவலம் நிலவுகிறது.

https://www.youtube.com/watch?v=3CVfSE3IweM

இந்த மண் ரொட்டியால் அவர்களின் வயிறு நிரம்பினாலும், சிறு வயதிலேயே பலர் நோய்வாய்ப்பட்டு இறந்துபோகும் கொடுமை நிகழ்ந்து வருகிறது.

ஹைத்தி மக்கள் படும் துன்பத்தை தெரிந்துகொள்ளும் நீங்கள், இனிமேலாவது உணவுப் பொருட்களை வீணாக்காதீர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet