Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

வருகிறது அடுத்த புயல் – பயிர்கள், மரங்களை காப்பது எப்படி?

0 Comments

Published on: Friday, December 14th, 2018 at 8:24 PM

கஜா புயல் தாக்கத்தால், காவிரி டெல்டா மாவட்டங்களில் இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் தென்னை மரங்கள் வேருடன் சாய்ந்தன. அதேபோல், மா, பலா, வாழை, முந்திரி, சப்போட்டா, கொய்யா மரங்களும் சாய்ந்த நிலையில், நெல், கரும்பு போன்ற பயிர்களும் நாசமாயின.

கஜா புயலின் பாதிப்பால், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலையில், அடுத்த ஒரு புயல் தமிழகத்தை நோக்கி வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், புயல் மற்றும் மழைக் காலங்களில் மரங்கள் மற்றும் பயிர்களை காப்பாற்ற வேளாண் துறை சார்பில் பல்வேறு அறிவுரைகள் அளிக்கப்பட்டுள்ளன.

தென்னைமரங்களில் இளநீர், காய்ந்த ஓலைகள், அதிகம் இருந்தால் காற்றின் வேகத்தில் மரம் அடியோடு சாயவோ, முறிந்து விழவோ வாய்ப்புள்ளதாகவும் அவற்றை வெட்டி அகற்றினால் மரம் புயலை தாங்கி நிற்கும் வாய்ப்புகள் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மா, பலா, முந்திரி உள்ளிட்ட மரங்களின் ஊடாக காற்று புகுந்து செல்லும் வகையில் பக்கவாட்டுக் கிளைகளையும் அதிகப்படியான இலைகளையும் கவாத்து செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புயல் மழைக்கு 4 நாட்களுக்கு முன் நீர் பாய்ச்சுவதை நிறுத்திவிட்டால் வேர் மண்ணில் இறுகி, மரம் சாயாமல் பாதுகாக்க உதவும் என்றும், மரங்களை சுற்றி பாத்தி கட்டுதல் உள்ளிட்ட பணிகளை புயலுக்குப் பின் மேற்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

வாழைத் தோப்பைச் சுற்றி வாய்க்கால் எடுத்தும், நெல், பயறு வகை, சிறுதானியங்கள், பருத்தி, கரும்பு நிலக்கடலை போன்ற பயிர்களுக்கு வயல்களில் வடிகால் வசதி ஏற்படுத்தியும் தண்ணீரை வடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புயலின்போது, பாதிப்புகளை முழுமையாக தடுக்க முடியாவிட்டாலும், வேளாண்துறையில் இந்த வழிமுறைகளை பின்பற்றினால், பாதிப்புகளை ஓரளவு குறைக்க முடியும். ஆகவே, பெய்ட்டி முன்பு இதை கண்டிப்பாக செய்யுங்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet