Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி…

0 Comments

Published on: Saturday, March 2nd, 2019 at 10:33 PM

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐதராபாத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய உஸ்மான் கவாஜா, கேப்டன் ஆரோன் பின்ச் ஜோடி இரண்டாவது ஓவரிலேயே பிரிந்தது. பும்ரா வீசிய பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆரோன் பின்ச் வெளியேறினார். தனது 100வது ஒரு நாள் போட்டியில் ஒரு ரன் கூட எடுக்க முடியாமல் அவர் ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார்.

அடுத்து களமிறங்கிய மார்கஸ் ஸ்டோனிஸ், 37 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இந்திய அணியினரின் சிறப்பான பந்து வீச்சால் ரன் எடுக்க முடியாமல் திணறிய ஆஸ்திரேலியா அணியினர், சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 50 ரன்கள் சேர்த்தார்.

50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்தது. முஹம்மது ஷமி, பும்ரா, குல்திப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர்தவான் ரன் எதுவும் எடுக்காமலேயே ஆட்டமிழந்தார். விராட் கோலி 44 ரன்கள் எடுத்திருந்த போது எல்பிடபிள்யு முறையில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

தோனியும், கேதர் ஜாதவும் நிலைத்து நின்று விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். 49வது ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் எடுத்து இந்திய அணி வெற்றி பெற்றது.

தோனி 59 ரன்களும், கேதர் ஜாதவ் 81 ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் இருக்கிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet