Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் – பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் தர தொலைபேசி எண்…

0 Comments

Published on: Thursday, March 14th, 2019 at 7:38 PM

பொள்ளாச்சி பாலியல் வன்புணர்வு விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள், ரகசியமாக புகார் அளிப்பதற்காக, தொலைபேசி எண்களை மாநில மகளிர் ஆணையம் வெளியிட்டுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் முகநூலில் நட்பாக பழகிய பெண்களை பேசி மயக்கி, தங்களது இடங்களுக்கு வரவழைத்த காமக்கொடூரன்கள், இளம்பெண்களை அடித்து துன்புறுத்தி பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏறடுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்காமல் போலீசார் மெத்தனமாக இருந்த நிலையில், இளம்பெண்கள் கதறும் வீடியோக்கள் வெளியானதை அடுத்து, சபரிநாதன், சதீஷ், திருநாவுக்கரசு, வசந்தக்குமார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த பாலியல் வன்புணர்வு விவகாரத்தில், அதிமுக நிர்வாகியாக இருந்து தற்போது நீக்கப்பட்டுள்ள பார் நாகராஜ் தொடர்பு இருப்பது தெரிந்தும், போலீசார் அவன் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனை தாக்கிய வழக்கில் மட்டுமே கைது செய்யப்பட்ட அவன் தற்போது ஜாமினில் ஜாலியாக இருக்கிறான்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அளித்த புகாரை வெளியிட்ட போலீசார், முன் யோசனையின்றியோ அல்லது திட்டமிட்டோ, புகார் அளித்த பெண்ணின் பெயரையும் வெளியிட்டுவிட்டனர். இதனால், மற்ற பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்க தயக்கம் காட்டுவதாகக் கூறப்படுகிறது.

பாலியல் வன்புணர்வு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட காமக்கொடூரன்கள் 4 பேரும் தற்போது குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

எனவே பாதிக்கப்பட்ட பெண்கள் 044-2855155, 044-28592750 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாநில மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் புகார் அளிப்பவர்கள் குறித்த ரகசியம் பாதுகாக்கப்படும் எனவும் ஆணையம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்கள் இனியும் சும்மா இருந்தால், அது சரியாக இருக்காது. தற்போது நடந்துள்ள கொடூரம், இனி வேறு யாருக்கும் நடக்கக் கூடாது என நினைத்தால், அச்சமின்றி புகார் அளிப்பதே சிறந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet