Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

பொள்ளாச்சி காமக்கொடூரன் திருநாவுக்கரசை சிபிசிஐடி விசாரிக்க அனுமதி…

0 Comments

Published on: Friday, March 15th, 2019 at 8:36 PM

பொள்ளாச்சி பாலியல் வன்கொடூர வழக்கில் முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு கோவை மாவட்ட நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பொள்ளாச்சியில் முகநூலில் நட்பாக பழகிய பெண்களை, தனிமையான இடத்துக்கு வரவழைத்து அடித்து, துன்புறுத்தி, பாலியல் வன்கொடூரத்தில் ஈடுபட்ட விவகாரத்தில், திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், திருநாவுக்கரசை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க 10 நாட்கள் அனுமதி கோரி சிபிசிஐடி தரப்பில் மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணைக்கு திருநாவுக்கரசை நீதிமன்றத்துக்கு போலீசார் அழைத்து வரவிருந்தனர்.

ஆனால் காலை முதலே நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள், பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் திரண்டிருந்தனர். திருநாவுக்கரசை தாக்க கல்லூரி மாணவர்கள் திட்டமிட்டிருந்ததாக தகவல் வெளியானது. இதனையடுத்து அசம்பாவிதங்களைத் தவிர்க்க காணொலி காட்சி மூலம் அவனிடம் விசாரிக்க போலீசார் அனுமதி கோரினர்.

இதற்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் போலீசாரின் கோரிக்கையை ஏற்று திருநாவுக்கரசிடம் காணொலி காட்சி மூலம் நீதிபதிகள் விசாரணை மேற்கொண்டனர்.

ஒரு மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடைபெற்ற நிலையில், திருநாவுக்கரசை 4 நாட்கள் சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதனையடுத்து அவனிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்க முடிவு செய்துள்ள போலீசார், அவனது பண்ணை வீடு உள்ளிட்ட வழக்கில் தொடர்புடைய இடங்களுக்கு அழைத்துச் செல்லவும் திட்டமிட்டுள்ளனர்.

இதனிடையே இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் சபரிராஜன் வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சோதனை நடத்தினர். காலை முதலே பொள்ளாச்சியை அடுத்த ஜோதிநகரில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர்.காலனியில் சபரிராஜனின் வீடு அமைந்துள்ள பகுதி முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.

பின் பிற்பகல் 12.45 மணியிலிருந்து 4 மணி வரை சோதனை நடைபெற்ற சபரிராஜன் வீட்டில் நடத்திய சோதனையில், பல முக்கிய ஆவணங்கள், பெண்டிரைவ்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet