Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

பெண்களை கற்பழித்த காமக்கொடூரன்கள் – கதறி அழுத இளம்பெண்கள்

0 Comments

Published on: Monday, March 11th, 2019 at 11:49 PM

https://m.youtube.com/watch?v=5hOgp7aucQs

பொள்ளாச்சியில் காதல் வலை வீசி பெண்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த கும்பலிடம் சிக்கிய இளம் பெண் ஒருவர் கதறி அழும் பதை பதைக்க வைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

இதனை அடுத்து இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்துள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம் பெண்களுக்கும், மாணவிகளுக்கும் பேஸ்புக் மூலம் காதல் வலை வீசி அவர்களை ஆபாசமாக படம் எடுத்து கும்பல் ஒன்று பணம் பறித்து மிரட்டி வந்தது. அந்த கும்பலை சேர்ந்த திருநாவுக்கரசு உள்ளிட்டோர் போலீசாரிடம் சிக்கியுள்ளனர்.

இந்த நிலையில் தங்களிடம் சிக்கிய பெண்களை இந்த கும்பல் அடித்து துன்புறுத்தி ஆபாசமாக வீடியோ பதிவு செய்யும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோவை பார்த்த பலரும் தங்களின் கோபத்தையும், பதைபதைப்பையும் வெளிப்படுத்தி வருகின்றனர். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொள்ளாச்சியில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளை காமுகர்கள் கூட்டம் ஒன்று கொடூரமான பாலியல் வன்முறைக்குட்படுத்தியிருக்கும் அதிர்ச்சி தரும் செய்தியும் அது தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவிகளின் எதிர்கால நலன் பாதுகாக்கப்படும் வகையில் விசாரணை நடைபெற வேண்டும் என அவர் வலியுறுத்தி இருக்கிறார்.

இதே போல் பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாசும், பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தின் பின்னணியில் உள்ளவர்களை அடையாளம் கண்டு கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொள்ளாச்சி பகுதியில் 250க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கும், அதைத் தொடர்ந்து மிரட்டல்களுக்கும் ஆளாக்கப்பட்டு வருவதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதயத்தை பதைபதைக்கச் செய்யும் இந்த பாலியல் குற்றங்களின் பின்னணியில் உள்ளவர்களை அடையாளம் கண்டு கைது செய்வதுடன், கடுமையான தண்டனையையும் பெற்றுத் தர வேண்டும் என்றும் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே பொள்ளாச்சியை சேர்ந்த நாகராஜ் என்பவர், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தாலும் அவர் நீக்கப்பட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இந்த விவகாரத்தில் தன் மீது களங்கம் விளைவிக்க எதிர்க்கட்சியினர் சதி செய்வதாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் குற்றம்சாட்டினார். இது தொடர்பாக அவதூறு வழக்க தொடர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet