Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

புல்லட்டில் டெஸ்ட் டிரைவ் – வடிவேலு பட பாணியில் மாயமான பலே திருடன்…

0 Comments

Published on: Thursday, March 7th, 2019 at 10:50 AM

சென்னை குரோம்பேட்டை ராயல் என்பீல்டு ஷோரூமில் இருந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான ராயல் என்பீல்டு 650 என்ற மோட்டார் சைக்கிளை ஓட்டிப்பார்ப்பதாக கூறி எடுத்துச் சென்ற இளைஞன் ஒருவன், வண்டியை திருடிச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

சென்னை குரோம்பேட்டை ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள் ஷோரூமில் புதிதாக வந்திருக்கும் புல்லட்டை விலைக்கு வாங்குவது போல பார்வையிட்டுள்ளான் ஒரு டிப்டாப் இளைஞன். தான் வில்லிவாக்கத்தை சேர்ந்த சோபியான் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட அவன், புதிய மாடல் ராயல் என்பீல்டு 650 புல்லட்டை ஓட்டி பார்க்க ஆசைப்படுவதாக கூறியுள்ளான்.

ஓட்டுனர் உரிமத்தை பிணையாக வாங்கி வைத்துக் கொண்டு ரூ.3 லட்சம் மதிப்பிலான புதிய புல்லட்டை ஓட்டிப் பார்க்க கொடுத்துள்ளனர். நீண்ட நேரமாகியும் அந்த இளைஞன் திரும்பி வராததால் வெளியில் காத்திருந்த ஷோரூம் ஊழியர் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.

இது குறித்து குரோம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அவனது ஓட்டுனர் உரிமத்தை ஆய்வு செய்தபோது அது போலியானது என்பது தெரியவந்தது.

இதையடுத்து ஷோரூமில் உள்ள சிசிடிவி காட்சியை கைப்பற்றி விசாரித்தபோது புதிய புல்லட்டுடன் தலைமறைவானவன் வில்லிவாக்கத்தை சேர்ந்த பிரபல கார் திருடன் சோபியான் என்பதும் அவன் மீது 34 சொகுசு கார்களை திருடிய வழக்கு இருப்பதாகவும் 12 முறை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டவன் என்பதும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, அவனை வலைவீசி தேடி வரும் போலீசார், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

எந்த ஒரு மதிப்பு மிக்க பிணைத் தொகை இன்றி விலைமதிப்புள்ள பொருளை, முன் பின் தெரியாத நபரை நம்பி கொடுத்தால் என்ன மாதிரியான விபரீதம் ஏற்படும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet