Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

பிரபாகரன் படத்தில் பாபி சிம்ஹா…

1 Comments

Published on: Monday, November 26th, 2018 at 4:07 PM

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றுக் கதையை மையப்படுத்தி உருவாகும் சீறும் புலி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
பாபி சிம்ஹா நடிக்கும் இந்தப் படத்தை ஸ்டுடியோ 18 நிறுவனம் தயாரிக்கிறது. நீலம், உனக்குள் நான், லைட் மேன் ஆகிய படங்களை இயக்கிய ஜி.வெங்கடேஷ்குமார், சீறும் புலி படத்தை இயக்குகிறார்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் 64வது பிறந்த நாளை முன்னிட்டு சீறும்புலி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் விடுதலைப்புலிகள் அணிந்திருக்கும் ராணுவ உடையில் பாபி சிம்ஹா தோன்றியுள்ளார். அவர் அருகில் ஒரு புலி உள்ளது. அதன் தலைமேல் கைவைத்தபடி நாற்காலியில் அமர்ந்துள்ளார் பாபி சிம்ஹா.

மக்கள் தலைவனின் எழுச்சி, வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு ஆகிய வாசகங்கள் போஸ்டரில் இடம்பெற்றுள்ளன. இந்தப் படத்தில் நடிக்கும் இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்கள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இடம்பெறவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1COMMENTS