Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

பப்ஜி கேம் விளையாடிய 10 இளைஞர்கள் கைது – பொறிவைத்து பிடித்த போலீஸ்…

0 Comments

Published on: Thursday, March 14th, 2019 at 9:02 PM

சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான பப்ஜி கேம் விளையாடிய 10க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறுவர்கள், இளைஞர்களை அடிமையாக்கி, அவர்களிடையே வன்மத்தை ஏற்படுத்துகிறது பப்ஜி கேம். இந்த விளையாட்டில் இருந்து தங்களது பிள்ளைகளை எப்படி காப்பாற்றுவது என பெற்றோர்கள் விழி பிதுங்கியிருக்கும் நிலையில், குஜராத் மாநிலத்தில் பப்ஜி கேம் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது.

தடையை மீறி பப்ஜி கேம் விளையாடினால், இந்திய அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 188-ன் படி, நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  பப்ஜி கேம் விளையாடியதற்காக, ராஜ்கோட்டில் கடந்த 2 நாட்களில் மட்டும் 10க்கும் மேற்பட்ட இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அதில் 6 பேர் இளங்கலை மாணவர்கள் எனக் கூறியுள்ள போலீசார், கைது செய்யப்பட்டவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

போலீசார் அருகில் வருவது கூட தெரியாமல், மும்முரமாக பப்ஜி கேம் விளையாடியதாக கூறியுள்ள காவல்துறையினர், கைப்பற்றப்பட்ட செல்போன்களில் இருந்து பப்ஜி கேம் விளையாடியதற்கான ஆதாரத்தை, நீதிமன்றத்தில் சமர்பிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

குஜராத் மாநில அரசை பின்பற்றி, நாடு முழுவதும் இந்த பப்ஜி கேமுக்கு தடை விதித்தால், பெற்றோர் நிம்மதியாக இருப்பார்கள். பார்க்கலாம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet