0 Comments
Published on: Thursday, December 6th, 2018 at 4:01 AM
பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய நெல் ஜெயராமன் காலமானார். சென்னை தேனாம்பேட்டை அப்பல்லோ மருத்துவமனையில் இன்று காலை 5:10 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. பாரம்பரிய நெல் ரகங்களை விவசாயிகள் விளைவிக்க வேண்டும் என்பதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தவர் நெல் ஜெயராமன்.
சுமார் 174க்கும் மேற்பட்ட அரியவகை நெல் விதைகளை சேகரித்தார். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக புற்றுநோயால் அவதியுற்று வந்தார். சென்னை தேனாம்பேட்டையில் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிப்பட்டிருந்த நிலையில் இன்று காலை 5.10 மணியளவில் சிகிச்சை பலனின்றி இறந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியை அடுத்த கட்டிமேடு கிராமத்தில், ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்தவர் நெல் ஜெயராமன். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் வழிகாட்டுதலின்பேரில், இயற்கை விவசாயம் உள்ளிட்ட பல்வேறு வேளாண் பணிகளை தொடர்ந்து பிரசாரம் மேற்கொண்டு வந்தார். மரபணு மாற்ற விதை திட்டங்களுக்கு எதிராக, நம்மாழ்வாருடன் இணைந்து போராடி வந்தார். பாரம்பரிய நெல் விதைகளை விளைவித்து, சக விவசாயிகளுக்கு கொடுத்து, அவர்களையும் பாரம்பரிய நெல்லை சாகுபடி செய்து, காப்பாற்றியமைக்காக மத்திய, மாநில அரசுகளின் விருது பெற்றார். ஆண்டுதோறும் நெல் திருவிழா நடத்தி, பாரம்பரிய நெல்ரகங்களை பிரபலப்படுத்தி வந்தார்.
No comments yet