Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

நாளை ஒருநாள் போட்டியில் தோனி விளையாடுவாரா?…

0 Comments

Published on: Friday, March 1st, 2019 at 9:00 PM

ஹைதராபாத்தில் நாளை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி நடைபெற உள்ள நிலையில், பயிற்சியின் போது இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான மகேந்திரசிங் தோனிக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி டி20, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. டி20 தொடரை 2-0 என்று ஆஸ்திரேலிய அணி கைப்பற்றிய நிலையில், ஒருநாள் போட்டி நாளை தொடங்குகிறது.

ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் நாளை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதலாவது ஒருநாள் ஆட்டம் பகலிரவாக நடைபெற உள்ளது.

இந்தப் போட்டிக்காக இந்திய வீரர்கள் அனைவரும் மைதானத்தில இன்று பேட்டிங், பீல்டிங் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். விக்கெட் கீப்பர் தோனியும் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு முடித்தார்.

அதன்பின் கேட்ச்பிடிக்கும் பயிற்சி நடந்தது. அப்போது அணியின் பயிற்சியாளர் குழுவில் இருக்கும் ராகவேந்திரா பந்தை எறிந்து தோனிக்கு பயிற்சி அளித்தார். அப்போது, பந்து திடீரென தோனியின் வலது முன்கையில் பட்டவுடன் வலியால் துடித்தார்.  அதன்பின் பேட்டிங் பயிற்சியிலோ அல்லது பீல்டிங்  பயிற்சியிலோ தோனி ஈடுபடவில்லை.

அதன்பின் தோனிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, அவர் ஓய்வுஎடுக்கச் சென்றார். காயத்தின் தன்மை குறித்து இன்னும் தெரியாத நிலையில், நாளை நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் ஆட்டத்தில் தோனி பங்கேற்பாரா என்பது தெரியவில்லை. நாளை காலைதான் தோனி பங்கேற்பது குறித்து தெரியவரும் என்று அணிநிர்வாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒருவேளை தோனிக்கு ஏற்பட்ட காயம் குணமடையாவிட்டால், அவருக்கு பதிலாக ரிஷப் பந்த் களமிறங்குவார். அவ்வாறு இல்லாவிட்டால், கே.எல். ராகுலுக்கு விக்கெட் கீப்பங் பணி அளிக்கப்பட்டு, அம்பதி ராயுடு களமிறங்கலாம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet