Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

தீவிரவாதத்தை எதிர்ப்பதில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயார் – சவுதி அரேபியா

0 Comments

Published on: Wednesday, February 20th, 2019 at 4:53 PM

தீவிரவாதத்தை எதிர்ப்பதில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயார் என சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார்.

அரசு முறைப் பயணமாக நேற்று இந்தியா வந்த சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு இன்று காலை குடியரசுத் தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திரமோடியை, சல்மான் சந்தித்துப் பேசினார். அப்போது இரு நாடுகளுக்கு இடையிலான உறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. புல்வாமாவில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதல் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பேச்சுவார்த்தை முடிவில் இரு நாடுகளுக்கு இடையே 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. சுற்றுலா, உள்கட்டமைப்பு, வீட்டு வசதி, தகவல் ஒலிபரப்பில் ஒத்துழைப்பு மற்றும் முதலீட்டை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய சவுதி அரேபிய இளவரசர் சல்மான், தீவிரவாதம் அனைத்து நாடுகளுக்கும் கவலை அளிக்கும் பொதுவான பிரச்சனையாக தீவிரவாதம் இருப்பதாக குறிப்பிட்டார். தீவிரவாதத்தை எதிர்கொள்ள இந்தியாவுடன் உளவுத்துறை தகவல்களை பகிர்ந்து கொள்ள தயார் என்றும் தெரிவித்தார். எதிர்கால சந்ததியினரின் நலனுக்காக, இந்தியா மற்றும் அண்டை நாடுகளுடன் ஒருங்கிணைந்து தீவிரவாதத்திற்கு எதிராக செயல்பட சவுதி அரேபியா தயாராக இருக்கிறது என்றும் சல்மான் கூறினார்.

பின்னர் பேசிய பிரதமர் மோடி, எந்த விதத்திலும் தீவிரவாதத்தற்கு ஆதரவு அளிக்க கூடாது என்பதை தாங்கள் ஏற்றுக் கொண்டுள்ளதாக குறிப்பிட்டார். தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளுக்கு கடும் அழுத்தம் தர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தீவிரவாத கட்டமைப்பை முடிவுக்கு கொண்டு வர தீவிரவாத குழுக்களுக்கு தண்டனை அளிக்க வேண்டியதும் அவசியம் என பிரதமர் தெரிவித்தார். இந்த பிரச்சனையில் இந்தியாவுக்கு உதவ சவுதி அரேபியா ஒப்புதல் அளித்து இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக மோடி தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet