Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

திமுக வேட்பாளர்கள் யார்..? – மார்ச் 17ல் அறிவிப்பு – மு.க.ஸ்டாலின்

0 Comments

Published on: Friday, March 15th, 2019 at 9:19 PM

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வரும் 17ஆம் தேதி அறிவிக்கப்படும் என  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வருகிற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், ஐக்கிய ஜனநாயக கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளன.

திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சிகளுக்கு இடங்கள் ஒதுங்கப்படாவிட்டாலும், நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக அந்த கட்சிகள் அறிவித்துள்ளன.

இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மு.க.ஸ்டாலின், திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை அறிவித்தார். அடுத்த சில மணி நேரங்களில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்தன.

இதனிடையே, சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக போட்டியிடும் 20 தொகுதிகளின் பட்டியலை மீண்டும் வாசித்தார். தொடர்ந்து பேசிய அவர், திமுக வேட்பாளர்களின் பட்டியலில் வரும் 17ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet