0 Comments
Published on: Tuesday, March 5th, 2019 at 4:13 PM
திமுக கூட்டணியில் அனைத்துக் கட்சிகளுடனும் தொகுதிப் பங்கீடு இறுதிப்படுத்தப்பட்டுவிட்டதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக 20 தொகுதிகளில் நிற்கிறது. மமகவுக்கு இந்தமுறை இடமில்லை என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 10 தொகுதிகள், விசிக, இடதுசாரிக் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள், முஸ்லீம் லீக், ஐஜேகே, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு தலா ஒரு தொகுதி என 19 தொகுதிகளும் மதிமுகவுக்கு 1 தொகுதியும் ஒரு ராஜ்ய சபா தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஒப்பந்தங்கள் நிறைவடைந்ததை அடுத்து அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது:
“திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு முடிவுக்கு வந்துவிட்டது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2, சிபிஎம் 2, சிபிஐ 2 மதிமுகவுக்கு ஒரு தொகுதி மற்றும் ராஜ்ய சபா தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, ஐஜேகே, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலா 1 தொகுதி ஒதுக்கப்பட்டு கூட்டணிப் பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது.
இதன்மூலம் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியது போக திமுக 20 தொகுதிகளில் போட்டியிடும். மார்ச் 7-ம் தேதியிலிருந்து கூட்டணிக் கட்சிகளுக்கு எந்த தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது குறித்து ஆலோசிப்போம்.
இரண்டு நாட்களில் தொகுதிகள் அறிவிக்கப்படும். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு யோசனை கூறியுள்ளோம். மனிதநேய மக்கள் கட்சிக்கு இந்த முறை கூட்டணியில் இடம் ஒதுக்க வாய்ப்பில்லை”.
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.
No comments yet