Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

டி 20 தொடர் – தமிழகம் த்ரில் வெற்றி

0 Comments

Published on: Tuesday, February 26th, 2019 at 7:28 PM

சையது முஸ்டாக் அலி டி 20 கிரிக்கெட் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

சூரத் நகரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தமிழக அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்தது. முரளி விஜய் 3, ஹரி நிஷாந்த் 4, பாபா இந்திரஜித் 8 ரன்களில் நடையை கட்ட 21 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்த நிலையில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான சதுர்வேத் 34, வாஷிங்டன் சுந்தர் 33, என்.ஜெகதீசன் 29 ரன்கள் சேர்த்ததால் சற்று கவுவரமான இலக்கை கொடுக்க முடிந்தது.

குஜராத் அணி தரப்பில் அர்ஸான் நக்வாஸ்வாலா 4 ஓவர்கள் வீசி 11 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றினார். 126 ரன்கள் இலக்குடன் பேட் செய்த குஜராத் அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது. உர்வில் படேல் 0, துருவ் ராவல் 2, பிரியங் கிரித் பன்சால் 14, அக்சர் படேல் 0, பியூஸ் சாவ்லா 0, ஹிதேன் மெஹ்ரா 10, ஹேமங் படேல் 3, தேஜஸ் படேல் 3, அர்ஸான் நக்வாஸ்வாலா 12 ரன்களில் நடையை கட்டினர்.

ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று விளையாடிய ஷிராக் காந்தி அரை சதம் அடித்தார். 16.5 ஓவர்களில் 96 ரன்களுக்கு 9 விக்கெட்களை இழந்த நிலையில், ஹர்திக் படேல் உறுதுணையுடன் ஷிராக் காந்தி கடுமையாக போராடினார். ஹர்திக் படேலுக்கு ஸ்டிரைக் கொடுக்காமல் ஷிராக் காந்தியே அதிக அளவிலான பந்துகளை எதிர்கொண்டார்.

இப்படியே ஷிராக் காந்தி 25 ரன்கள் வரை சேர்த்தார். அபிஷேக் தன்வார் வீசிய கடைசி ஓவரின் கடைசி பந்தில் வெற்றிக்கு 3 ரன்கள் தேவையாக இருந்தது. இந்த சூழ்நிலையில் கடைசி பந்தை அபிஷேக் தன்வார் வைடாக வீசினார். நடுவரும் அதற்கான சிக்னலை வழங்கிய நிலையில் ஹர்திக் படேல் அவசரப்பட்டு ரன் ஓட முயன்றார். இதை சரியாக பயன்படுத்திக் கொண்ட தன்வார், அவரை ரன் அவுட் செய்தார்.

முடிவில் 19.5 ஓவர்களில் குஜராத் அணி 124 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனால் தமிழக அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷிராக் காந்தி 66 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 68 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பி பிரிவில் உள்ள தமிழக அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது. 3 ஆட்டங்களில் விளையாடி உள்ள தமிழக அணி 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் தனது பிரிவில் 8 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet