0 Comments
Published on: Saturday, March 16th, 2019 at 8:33 AM
சென்னையில் வருகிற 23ஆம் தேதி முதல் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி ஆரம்பமாகிறது. இதனால், சேப்பாக்கம் மைதானத்தில் நள்ளிரவு முதல் ரசிகர்கள் டிக்கெட் வாங்க காத்திருந்தனர்.
சென்னையில் வரும் 23ஆம் தேதி முதல் கட்டமாக நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் ராயல் சேலஞ் பெங்களூர் (RCB) என இரு அணிகள் மோதுகின்றன.
இதற்கான டிக்கெட் வினியோகம் இன்று (16.03.19) காலை 11:30 மணிக்கு ஆரம்பம் ஆகிறது. இந்த டிக்கெட்டை பெறுவதற்காக நேற்று காலையில் துவங்கி இன்று விடிய விடிய ரசிகர்கள் வரிசையில் காத்திருந்தனர்.
சென்ற ஆண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக பல்வேறு அமைப்புகள் நடத்திய போராட்டத்தின் விளைவாக சென்னையில் ஒரு போட்டியை தவிர மற்றவை திட்டமிட்டபடி சென்னையில் நடக்கவில்லை. இந்த முறை தேர்தல் வருவதால் ஏதேனும் குளறுபடிகள் நடக்க வாய்ப்பிருப்பதாகக் கருதி முதல் நாள் ஆட்டத்தை காண ஆர்வம் காட்டுகின்றனர்.
சேப்பாக்கம் மைதானம் வளாகத்தில் தனியாக டிக்கெட் கவுண்டர்கள் அமைக்கப்பட்டு அதற்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
டிக்கட் விலை விபரம்
ரூ.1,300இல் துவங்கி, ரூ.2,500, ரூ.5,000, ரூ.6,500 வரை விற்பனை செய்யப்படுகிறது.
No comments yet