Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

குப்பை அள்ளும் டிராஸ் டேக் – மோடிக்கு சவால் விடுக்கும் புது சேலஞ்ச்…

0 Comments

Published on: Thursday, March 14th, 2019 at 7:16 PM

ஐஸ் பக்கெட், நில்லு நில்லு, தாடியில் பூ சொருகுவது, 10 இயர்ஸ் உள்பட பல்வேறு சேலஞ்சுகளை பார்த்துவிட்ட இளைஞர்கள் மத்தியில் தற்போது பிரபலமாகியுள்ள டிராஸ் சேலஞ்ச், இணையதளத்திலும் வைரலாகியுள்ளது.

நிறைய ஐஸ் நிரம்பிய தண்ணீரில் குளிக்கும் ஐஸ் பக்கெட் சேலஞ்சில் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் உள்பட பல்வேறு பிரபலங்கள் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து நம் இளைஞர்களும் ஐஸ் பக்கெட் சேலஞ்சில் ஈடுபட்ட நிலையில், சாலையில் ஓடிக்கொண்டிருக்கும் வாகனங்களை நிறுத்தி, ஆடும் நில்லு நில்லு சேலஞ்ச் என ஒரு நோய் பரவியது.

இந்த சேலஞ்சில் பல இளைஞர்கள் விபத்தில் சிக்கிய நிலையில், அடர்ந்த தாடியில் பூக்களை சொருகி வைக்கும் சேலஞ்ச் அண்மையில் பிரபலமானது. இதுபோல, தற்பொது குப்பைகளை சுத்தம் செய்யும் #trashtag என்ற ஆக்கப்பூர்வமான சேலஞ்ச் வைரலாகியுள்ளது.

வீட்டு அருகில் குப்பைகள் அதிகம் நிறைந்த இடத்தில் முதலில் படம் பிடித்து, அதை சமூகவலைதளங்களில் பதிவிட வேண்டும். அதன்பிறகு, குப்பைகளை செய்ய வேண்டும். குப்பைகளை அகற்றிய பிறகு அதே இடத்தில் மீண்டும் ஒரு புகைப்படத்தை எடுத்து வெளியிட வேண்டும். இதுதான் டிராஸ் டேக் சேலஞ்ச்.

ஒரு உண்மை என்னவென்றால், டிராஸ் டேக் சேலஞ்ச் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், பைரன் ரோமன் என்பவர் இந்த சேலஞ்சை செய்தது பார்த்து, வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டது.

இதனால், இந்த சேலஞ்ச் தற்போது இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. இவங்க போற போக்க பார்த்தா, குப்பை இல்லாத இடத்தை கூட்டி, அங்கு புகைப்படம் எடுத்துப் போட்ட மோடிக்கே டஃப் கொடுப்பாங்க போலயே..?!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet