Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் – ம.தி.மு.க. – பா.ஜ.கவினர் இடையே மோதல்…

0 Comments

Published on: Friday, March 1st, 2019 at 8:34 PM

நெல்லை மாவட்டம் காவல்கிணறில் மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்திய போது ம.தி.மு.க. – பா.ஜ.கவினர் இடையே மோதல் மூண்டது.

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வரவுள்ள பிரதமர் மோடிக்கு ஆரல்வாய்மொழியில் கருப்பு கொடி காட்டப்போவதாக வைகோ ஏற்கனவே அறிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆரல்வாய்மொழியில் நேற்று இரவு முதலே பா.ஜ.க., இந்து முன்னணி, விஸ்வ இந்து பரிஷத் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் குவிந்ததைத் தொடர்ந்து போலீசாரும் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் திட்டமிட்டபடி ம.தி.மு.வினரும் குவிந்த நிலையில் பிரச்சினையை தடுக்க ஆரல்வாய்மொழியை அடுத்த காவல் கிணறு என்ற இடத்தில் போலீசார் வைகோவை தடுத்து நிறுத்தினர். அங்கு வைகோ கருப்பு பலூன்களை பறக்கவிட்டும் கருப்பு கொடி காட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இந்நிலையில் மர்ம நபர்கள் கற்களை வீசியதைத் தொடர்ந்து ம.தி.மு.க. – பா.ஜ.க. தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது. போலீசாருக்கும் ஒரு தரப்பினருக்கும் கடும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது

இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி இரு தரப்பினரையும் விரட்டியடித்தனர். இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து போலீசார் வைகோ உள்ளிட்டோரை கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனிடையே கல்வீச்சில் காயம் அடைந்த இருவர் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet