Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

ஓய்வுபெறுவது குறித்து கிறிஸ் கெய்ல் மறுயோசனை…

0 Comments

Published on: Thursday, February 28th, 2019 at 5:45 PM

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் நேற்று 162 ரன்களை விளாசி, 419 ரன்கள் மகா இலக்கை நோக்கி அதிரடியாக ஆடிய கிறிஸ் கெய்ல் உலகக்கோப்பை முடிந்த பிறகு ஓய்வுபெறுவதாக அறிவித்திருந்தார், ஆனால் இந்த இன்னிங்சுகுப் பிறகு ஓய்வுபெறும் முடிவை தள்ளிவைப்பார் என்பது போல் சூசகமாகத் தெரிவித்துள்ளார் கிறிஸ் கெய்ல்.

நேற்றைய ஒருநாள் போட்டியில் 14 சிக்சர்களை விளாசினார் கெய்ல். இந்தத் தொடரில் இதுவரை 347 ரன்களை 115.66 என்ற சராசரியில் எடுத்துள்ளார் கெய்ல்.  பிரையன் லாராவுக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன்கள் எடுத்த 2வது மே.இ.தீவுகள் வீரர் ஆனார் கெய்ல்.

இந்நிலையில் கெய்ல் கூறியதாவது:

நான் விளையாடிய போட்டிகளிலேயே மிகவும் விறுவிறுப்பாக அமைந்த ஒரு போட்டி இது என்றே கருதுகிறேன். மிகவும் பிரமாதமான கிரிக்கெட். நான் நிறைய டி20-யில் ஆடிவிட்டு 50 ஒவருக்கு வந்துள்ளேன், அதனால் கொஞ்சம் கடினமானதுதான். ஆனால் உடல் 50 ஒவர் கிரிக்கெட்டுக்கு ஏற்றவாறு மாறிவிட்டது.

இன்னும் கொஞ்சம் உடல் பயிற்சி மேற்கொண்டு உடலை இன்னும் கனகச்சிதமாக மாற்றி விட்டேன் என்றால், ‘இன்னும் சில காலம் நீங்கள் கிறிஸ் கெய்ல்’ ஆட்டத்தைப் பார்க்கலாம். விஷயங்கள் விரைவில் மாறும், என் உடல் இன்னும் 2 மாதங்களில் முழு ஃபிட் ஆகிவிடும்.

10,000 ரன்கள் மைல்கல்லை எட்டியது கிரேட், நான் டி20யிலும் இந்த மைல்கல்லை எட்டியுள்ளேன். மே.இ.தீவுகளுக்காக இந்தச் சாதனையைச் செய்வது மேலும் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கிறது.

உடலுக்கு என்னவாயிற்று? எனக்கு வயடு 40-ஐ நெருங்கி விட்டது. ஓய்வு அறிவிப்பை கைவிடலாமா? பார்ப்போம், கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துச் செல்வோம்.

நேற்று புதிய பந்தை சரியாகப் பயன்படுத்தவில்லை அப்படிப் பயன்படுத்தியிருந்தால் 380 ரன்களை விரட்டியிருப்போம்.

அணி வீரர்கள் கடும் ஏமாற்றமடைந்தனர், அவர்கள் முகத்தில் தோல்வியின் ஏமாற்றம் தெரிந்தது. இது இளம் வீரர்களுக்கு கற்றுக் கொள்ளும் காலம், வித்தியாசமாக ஏதாவது செய்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம். ஆகவே தோல்வியுறும்போது ஏமாற்றமடையும் பாவனைகள் நல்ல அறிகுறிகளைக் காட்டுகிறது. இதே போல் சூழ்நிலை மறுபடியும் ஏற்பட்டால் முடிவுகள் நிச்சயம் வேறு மாதிரி அமையும்.

இவ்வாறு கூறினார் கிறிஸ் கெய்ல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet