Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

எத்தனை பயங்கரவாதிகள் பலியானார்கள் என்று தாங்கள் கணக்கிடவில்லை – பி.எஸ்.தனோவா

0 Comments

Published on: Monday, March 4th, 2019 at 4:35 PM

எத்தனை பயங்கரவாதிகள் பலியானார்கள் என்று தாங்கள் கணக்கிடவில்லை என விமானப்படை தலைமை தளபதி பி.எஸ்.தனோவா தெரிவித்துள்ளார்.

மருத்துவ பரிசோதனை சிகிச்சைக்குப் பிறகே, விங் கமாண்டர் அபிநந்தன் மீண்டும் போர் விமானியாக பணிக்கு திரும்புவது குறித்து முடிவு செய்யப்படும் என்று விமானப்படை தலைமை தளபதி பி.எஸ்.தனோவா தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் பாலக்கோட்டில் பயங்கரவாதிகளின் முகாமை இந்திய விமானப் படை தாக்கி அழித்து ஒரு வாரம் ஆன நிலையில், முதன் முறையாக விமானப்படை தளபதி தனோவா கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், திட்டமிட்ட இலக்கை இந்திய விமானப்படையின் விமானங்கள் தாக்கியதாக குறிப்பிட்டார். தாக்குதலில் எத்தனை பயங்கரவாதிகள் பலியானார்கள் என்று தாங்கள் கணக்கிடவில்லை என்றும், இது தொடர்பாக மத்திய அரசுதான் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

மற்றொரு கேள்விக்குப் பதிலளித்த பி.எஸ்.தனோவா, இந்தியாவின் மிக் 21 பைசன் போர் விமானங்கள் மேம்படுத்தப்பட்டவை என்றும், திறன்வாய்ந்தவை என்றும் குறிப்பிட்டார். இந்திய படையில் உள்ள அனைத்து விமானங்களும் எதிரிகளை எதிர்த்து போரிடும் திறன் படைத்தவை என்றும் அவர் விளக்கினார்.

இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தனுக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகள், சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக தனோவா கூறினார். தேவையான உடல் தகுதியை அபிநந்தன் பெற்று இருந்தால் மட்டுமே அபிநந்தன் போர் விமானத்தை இயக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

பிரான்சிடம் இருந்து வாங்கப்படும் ரபேல் போர் விமானங்கள் வரும் செப்டம்பர் மாதம் இந்திய விமானப்படையில் இணையும் என்று அவர் கூறினார். மேலும் சில விமானங்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தனோவா தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet