Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

உலகக் கோப்பை அணியில் மாற்றம் இருக்குமா? விராட் கோலி பதில்

0 Comments

Published on: Friday, March 1st, 2019 at 9:12 PM

 

உலகக் கோப்பைக்கான இந்திய அணியைத் தேர்வு செய்வதில் ஐபிஎல் போட்டி மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற கேள்விக்கு கேப்டன் விராட் கோலி அதிரடியாக பதில் அளித்துள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இரண்டு டி-20 மற்றும் 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டி-20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி, கடைசி ஓவரில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ‘த்ரில்’ வெற்றி பெற்றது. பெங்களூருவில் நடந்த 2-வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் மீண்டு ஆஸ்திரேலிய அணியே வெற்றி பெற்றது.

இதன்மூலம், ஆஸ்திரேலியாவிடம் 11 ஆண்டுகளுக்குப்பின் சொந்த மண்ணில் கிரிக்கெட் தொடரை இழந்தது இந்திய அணி. விராட் கோலி கேப்டன்ஷியின் இந்திய அணி சந்தித்த முதல் தோல்வி இதுவாகும். இரு அணிகள் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி நாளை (மார்ச்.2) நடைபெற உள்ளது.

இந்நிலையில், உலகக் கோப்பைக்கான இந்திய அணியைத் தேர்வு செய்வதில் ஐபிஎல் போட்டி எந்தவித மாற்றத்தையையும் ஏற்படுத்தாது என கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், “ஐபிஎல் போட்டியில் உலகக் கோப்பைக்கான இந்திய அணியைத் தேர்வு செய்வதில் பாதிப்பை ஏற்படுத்தாது.

உலகக்கோப்பைக்கு ஒரு சிறந்த அணி தேவை. வீரர்கள் ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடினால் மட்டும் தேர்வு செய்ய முடியாது. ஐபிஎல் போட்டிக்கு முன்பே உலகக் கோப்பைக்காக சிறந்த இந்திய அணி தேர்வு செய்யப்படும்” என்று தெரிவித்தார்.

இதனால், ஐபிஎல் போட்டியில் விளையாடும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதற்குமுன் நிறைய வீரர்கள், ரஞ்சி டிராபி உள்ளிட்ட உள்ளூர் போட்டிகளில் விளையாடாமல் ஐபிஎல் போட்டி மூலம் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet