Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

இந்தியா உடனான ஒப்பந்தங்களை நிறுத்தி வையுங்கள் – உலக மல்யுத்தம் பெடரேசன் வேண்டுகோள்

0 Comments

Published on: Tuesday, March 5th, 2019 at 5:12 PM

இந்தியா உடனான ஒப்பந்தங்களை நிறுத்தி வையுங்கள் என்று அனைத்து நாடுகளுக்கும உலக மல்யுத்தம் பெடரேசன் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் புல்வாமாவில் கடந்த மாதம் 14-ந்தேதி சிஆர்பிஎப் வீரர்கள் மீது பயங்கரவாதியால் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 40 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் இந்திய அரசு பாகிஸ்தானை தனிமைப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தது.

தாக்குதல் நடந்த சில நாட்களில் டெல்லியில் உலக துப்பாக்கிச்சுடுதல் போட்டி நடைபெற்றது. இதில் சிறப்பாக செயல்படும் வீரர்கள் ஜப்பான் டோக்கியோவில் அடுத்தாண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை பெறுவார்கள் என்ற நிலை இருந்தது.

ஆனால், இந்திய அரசு பாகிஸ்தானைச் சேர்ந்த வீரர்களுக்கு விசா வழங்க மறுத்துவிட்டது. இதனால் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி இந்தியா உடனான குளோபல் நிகழ்ச்சிக்கான விவாதங்களை நிறுத்தி வைத்துள்ளது.

இந்நிலையில் இந்திய மல்யுத்த சங்கங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ள மற்ற நாட்டின் சங்கங்கள் அதனை சஸ்பெண்ட் செய்து வையுங்கள் என்று உலக மல்யுத்தம் பெடரேசன் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet