Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

ஆம் ஆத்மியுடன் கூட்டணி கிடையாது என காங்கிரஸ் திட்டவட்டம்…

0 Comments

Published on: Tuesday, March 5th, 2019 at 4:28 PM

டெல்லியில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி கிடையாது என காங்கிரஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

பாஜகவையும் மோடியையும் எதிர்கொள்ள வலுவான கூட்டணி என்பதால் காங்கிரஸுடன் கூட்டணி அமைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று கருதிய ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால், அதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.

ஆனால் ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக அஜய் மக்கான் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கட்சி தலைமைக்கு கடும் நெருக்கடி கொடுத்து வந்தனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சமரசம் செய்ய முற்பட்டபோதிலும், ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.

இந்த பரபரப்பான சூழலில் டெல்லியின் ஏழு மக்களவைத் தொகுதிகளில் 6 தொகுதிகளுக்கான வேட்டபாளர்களை ஆம் ஆத்மி அதிரடியாக அறிவித்துள்ளது. மேற்கு டெல்லி தொகுதிக்கு மட்டுமே ஆம் ஆத்மி கட்சி வேடபாளரை அறிவிக்கவில்லை. வேட்பாளர்களை அறிவித்து விட்டபோதிலும் கூட்டணி கதவை ஆம் ஆத்மி மூடவில்லை. காங்கிரஸூடன் ஆம் ஆத்மி ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. எனினும் தனித்து போட்டியிடும் முடிவில் மாற்றமில்லை என காங்கிரஸ் இன்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து டெல்லி முன்னாள் முதல்வரும், மாநில காங்கிரஸ் தலைவருமான ஷீலா தீட்சித் கூறுகையில் ‘‘டெல்லியில் கூட்டணி அமைத்து போட்டியிடும் திட்டம் இல்லை. தனித்து போட்டியிடுவது என்ற முடிவை ஏக மனதாக எடுத்துள்ளோம். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் விவாதித்த பிறகு இந்த முடிவை எடுத்துள்ளோம். டெல்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்தே போட்டியிடும்’’ எனத் தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet