Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

அபிநந்தன் உடலில் இருக்கு… ஆனா இல்ல..?! என்னன்னு தெரியுமா?

0 Comments

Published on: Sunday, March 3rd, 2019 at 8:16 PM

பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைப்பிடிக்கப்பட்டு, இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட விமானப்படை வீரர் அபிநந்தன் உடலில் காயம் இருப்பதை உறுதி செய்துள்ள மருத்துவர்கள், அவரது உடலில் உளவுக்கருவிகள் இல்லை என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளனர்.

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் விமானப்படை விமானத்தை துரத்திச் சென்று வீழ்த்தினார் விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன். அதேநேரத்தில் பாகிஸ்தான் படையின் தாக்குதலில், இந்தியாவின் அதரபழசான விமானமும் உடைந்ததால், பாராசூட் மூலம் குதித்த அபிநந்தனை, வெறிப்பிடித்த பாகிஸ்தானியர்கள் பலர் கொடூரமாக தாக்கினர்.

பாகிஸ்தானியர்களின் தாக்குதலில் இருந்து அபிநந்தனை மீட்டு அழைத்துச் சென்ற அந்நாட்டு ராணுவத்தினர், பிரதமர் இம்ரான்கானின் உத்தரவின்படி, விடுவித்தனர். வாகா எல்லையில் இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட அபிநந்தன், தற்போது, டெல்லியில் உள்ள கண்டோன்மெண்ட் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் விடுவித்தாலும், அவரை மிரட்டினார்களா? அல்லது மூளைச்சலவை செய்து மாற்றினார்களா என்பதை மனநல சிகிச்சை மூலம் கண்டறிய முடிவு செய்துள்ள இந்திய ராணுவத்தினர், முதற்கட்டமாக அவரது உடலில் காயங்கள் மற்றும் உளவுபார்க்கும் கருவிகள் ஏதேனும் பொருத்தப்பட்டிருக்கிறதா என்பதை சோதனை செய்து வருகின்றனர்.

அதன்படி, டெல்லி கண்டோன்மெண்ட் மருத்துவமனையில் அபிநந்தனுக்கு எடுக்கப்பட்ட எம்.ஆர்.ஐ. ஸ்கேனில், அவரது முதுகின் தண்டுவடத்தின் கீழ் பகுதியில் காயம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. போர் விமானத்தில் இருந்து அபிநந்தன் பாராசூட் மூலம் கீழே குதித்தபோது, காயம் ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கீழே விழுந்த அபிநந்தனை பாகிஸ்தானியர்கள் தாக்கியதால், அவரது விலா எலும்பு பகுதியிலும் காயம் இருப்பதை உறுதி செய்துள்ள மருத்துவர்கள், அபிநந்தன் உடலில் உளவு பார்க்கும் கருவிகள் எதுவும் பொருத்தப்படவில்லை என்றும் உறுதி செய்துள்ளனர்.

இருப்பினும் உடலில் ஏதேனும் நச்சுத்தன்மை வாய்ந்த மருந்துகள் செலுத்தப்பட்டுள்ளதா? அல்லது வைரஸ் கிருமிக புகுத்தப்பட்டுள்ளதா? என தொடர்ந்து ஆய்வு செய்து மருத்துவர்கள், அபிநந்தன் நலமுடனே இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, அபிநந்தன் உடலில் காயம் ஏற்பட்டிருப்பதால், அவர் மீண்டும் விமானப்படையில் இணைந்து பணியாற்ற முடியாது என மூத்த ராணுவ அதிகாரிகள் சிலர் தெரிவித்துள்ளனர். அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிவிட்டதால், அவர் போர்க்கைதி என்ற முறையிலேயே நடத்தப்பட வாய்ப்புள்ளதாகவும், காயமும் ஏற்பட்டுவிட்டதால், அவர் சாதாரண பணிகளுக்கே நியமிக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

ஆனால், மாவீரன் அபிநந்தனோ, தாம் மீண்டும் விமானப்படையில் இணைந்து பணியாற்ற விரும்புவதாக கூறியதாக, அவருடன் நெருக்கமாக உள்ள சிலர் தெரிவித்துள்ளனர். இதனிடையே, அபிநந்தனை உளவியல் ரீதியாகவும் சோதனை செய்ய ராணுவம் முடிவு செய்துள்ளதால், அவர் வீடு திரும்ப மேலும் சில நாட்கள் ஆகலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet