Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

அபிநந்தனுக்கு மனரீதியாக துன்புறுத்தலா? – விஷமிகளின் வதந்தி….

0 Comments

Published on: Sunday, March 3rd, 2019 at 9:20 PM

பாகிஸ்தான் ராணுவத்தினர் தம்மை உடல் ரீதியாக துன்புறுத்தவில்லை என்றாலும், மனரீதியாக துன்புறுத்தியதாக அபிநந்தன் கூறியதாக வெளியான தகவல், விஷமிகள் பரப்பிவிட்ட வதந்தி என தெரியவந்துள்ளது.

பாகிஸ்தானில் இருந்து நாடு திரும்பிய இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் தற்போது, டெல்லி கண்டோன்மெண்ட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைகளுக்கும், ஆய்வுக்கும் உட்படுத்தப்பட்டு வருகிறார். இந்நிலையில், அவரை நேற்று பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இது நடந்த சில நிமிடங்களிலேயே, அபிநந்தன் ட்விட்டர் பக்கத்தில், நிர்மலா சீதாராமனுக்கு நன்றி தெரிவித்திருந்தார். மேலும், மோடி மீண்டும் பிரதமர் ஆவாரா? என பாகிஸ்தான் ராணுவத்தினர் கேட்டதாகவும், மன ரீதியாக அவர்கள் தம்மை துன்புறுத்தியதாகவும் அபிநந்தன் ட்விட்டரில் கூறியிருந்தார்.

ஆனால், இது எதுவுமே அபிநந்தன் கூறியதில்லை என தெரியவந்துள்ளது. டெல்லியில் ராணுவ அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பிலும், சோதனை மற்றும் விசாரணையில் இருந்து வரும் அபிநந்தன், இதுவரை செல்போன் பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அபிநந்தனை அவரது குடும்பத்தினர் சந்திக்க வேண்டும் என்றாலே, அதிகாரிகளின் முன்னிலையில் சில நிமிடங்கள் மட்டுமே பேச வேண்டும் என்ற கட்டுப்பாடும் தற்போது இருக்கிறது என்கின்றனர். எனவே அபிநந்தன் இதுவரை ட்விட்டர் பயன்படுத்தவில்லை என்றும் கூறும் அதிகாரிகள், அவரது பெயரில் வலம் வரும் ட்விட்டர் கணக்கு, விஷமிகளின் போலி கணக்கு என தெரிவித்துள்ளனர்.

அபிநந்தன் முழுவதும் விடுதலையான பிறகு, அவர் அதிகாரப்பூர்வமாக ஊடகங்களுக்கு பேட்டியளித்தால் மட்டுமே, உண்மைகள் தெரியவரும் என்றும், அதுவரை அவரது பெயரில் பரப்பப்படும் தகவல்கள் அனைத்தும் பொய்யானவையே என்றும் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet