Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

அபிநந்தனுக்கு பாகிஸ்தானில் நடைபெற்றது குறித்து கேட்டறிய விமானப்படை அதிகாரிகள் முடிவு…

0 Comments

Published on: Saturday, March 2nd, 2019 at 10:35 PM

விமானப்படை வீரர் அபிநந்தனுக்கு டெல்லி விமானப்படை மருத்துவமனையில் உடல் பரிசோதனை நடைபெற்றது. அடுத்த கட்டமாக பாகிஸ்தானில் என்ன நடைபெற்றது என்பது குறித்து அவரிடம் விமானப்படை உயரதிகாரிகள் கேட்டறிய உள்ளனர்.

பாகிஸ்தான் ராணுவத்தால் பிடிபட்டு 3 நாட்களுக்கு பிறகு அபிநந்தன் இந்தியா திரும்பி உள்ளார். வாகா எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அபிநந்தனை இந்திய ராணுவ அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பாகிஸ்தான் பிடியில் இருந்து மீண்டு வந்த அபிநந்தன் அச்சமின்றி துணிவுடன் வீரநடை போட்டு இந்திய எல்லைக்குள் மிடுக்குடன் நுழைந்தார்.

அவர், வாகா எல்லையில் நுழைந்தபோது பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனை முகமலர்ச்சியுடன் அபிநந்தன் ஏற்றுக்கொண்டார். என்றாலும் அவரை ஊடகத்தினர் நெருங்க ராணுவ உயர் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.

இந்திய எல்லைக்குள் அபிநந்தன் கால் வைத்ததும், விமானப்படை உயர் அதிகாரி கபூர் அவரை ராணுவ வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றார்.

வாகாவில் இருந்து அமிர்தசரஸ் வந்த அபிந ந்தன் அங்கிருந்து விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டார். அங்குள்ள விமானப்படை வீர ர்கள் விடுதியில் இரவு தங்கிய அவர், பின்னர் காலையில் விமானப்படை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்ட்டார். போர் விமானம் தாக்குதலுக்கு உள்ளாகும் போது அதிலிருந்து பாராசூட் மூலம் குதித்து தப்பும் விமானிகளுக்கு முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும் என்பது சர்வதேச விதிமுறையாகும். இதன் படி அபிந ந்தனுக்கு டெல்லி மருத்துவமனையில் பரிசோதனை நடைபெற்றது. இதற்காக மருத்துவமனையில் தங்கி இருந்த அவரை பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மாலா சீதாராமன் சந்தித்து நலம் விசாரித்தார்.

மருத்துவமனையில் பரிசோதனைகள் முடிந்த பின்னர் அபிந ந்தனிடம் விமானப்படை உயரதிகாரிகள் துறை ரீதியிலான விசாரணை மேற்கொள்ள உள்ளனர். போர்க்கைதிகள் தாயகம் திரும்பும் போது வழக்கமாக கடைபிடிக்கப்படும் நடைமுறைப்படி அபிநந்தனிடம் தகவல்களை கேட்டறிய உள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.  எதிரி நாட்டுக்குள் அபிநந்தனுக்கு என்னென்ன? நடந்தது என்பது பற்றி ராணுவத்தின் உளவுப் பிரிவு அதிகாரிகள் விசாரணையில் ஈடுபடுவார்கள்.

இதுபோல பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட வீடியோ காட்சியில் காணப்பட்ட விமானத்தின் பாகம், அது எந்த பகுதி? என்பது குறித்தெல்லாம் ராணுவத்தின் இன்டெலிஜன்ஸ் பிரிவு அதிகாரிகள் விசாரிக்க உள்ளனர். அதுவரை அபிநந்தனை ஊடகங்கள் சந்திக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. அபிநந்தன் வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார் என்று பாகிஸ்தான் கூறி இருந்தது. ஆனால் அவர், மிகவும் காலதாமதமாக இரவு 9.20 மணிக்குதான் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

ராணுவத்தின் வழக்கமான நடைமுறைகள், அலுவலக குறிப்பேடுகளில் எழுதுவது உள்பட பல்வேறு காரணங்களால் அபிநந்தன் இந்தியாவுக்கு வருவது தாமதமானதாக கூறப்பட்டது. இதில் எந்த அளவுக்கு உண்மை உள்ளது என்பது பற்றியும், அதிகாரிகள் விசாரிக்க உள்ளனர். பாகிஸ்தான் ராணுவ அலுவலகத்தில் அபிநந்தன் கவுரமாக நடத்தப்பட்டதாகவும், அங்குள்ள அதிகாரியிடம் அபிநந்தன் உரையாடும் காட்சிகளும் வெளியானது.

வழக்கமாக ராணுவ அலுவலக ரகசியங்கள் வெளியாவதில்லை. ஆனால் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவ அலுவலகத்தில் அந்நாட்டு அதிகாரியுடன் உரையாடும் காட்சிகள் வெளியானது. ஒரு நிமிடம் 24 நொடிகள் கொண்ட அந்த காட்சியில் அபிநந்தன் பேசுவது பல முறை எடிட் செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு காரணம் என்ன? என்பது பற்றியும் இந்திய அதிகாரிகள் விசாரிக்க உள்ளனர்.

மேலும் விமானப்படை விதிகளின் படி, அபிந ந்தன் தனது அறிக்கையையும் சமர்பிக்க உள்ளார். இதற்கான நடைமுறைகள் முடிந்த பின்னரே அவர் வீடு திரும்புவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet