Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

அதிமுக உச்சகட்ட கோஷ்டி மோதல்: 5 பேர் காயம்…

0 Comments

Published on: Tuesday, March 5th, 2019 at 5:03 PM

கடலூர் மாவட்ட அதிமுகவின் கிழக்கு மாவட்டச் செயலாளரான அமைச்சர் எம்.சி.சம்பத்தும், மேற்கு மாவட்டச் செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினரான அருண்மொழித்தேவனும் செயல்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு இடையே கடும் கருத்து வேறுபாடு நிலவுகிறது.

இதனால் கடலூர் மாவட்ட அதிமுகவில் இருவரும் இரு பிரிவுகளாக செயல்பட்டு வருகின்றனர். மாவட்டத்தில் உள்ள முருகுமாறன், பாண்டியன், சத்யா பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைத்து அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களும் அருண்மொழித்தேவன் தலைமையில் செயல்படுகின்றனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டம் புதுப்பேட்டையில் அதிமுக சார்பில் மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது.

இந்த மருத்துவ முகாமினை துவக்கி வைப்பதற்காக பண்ருட்டி சட்டப்பேரவை உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வம் மற்றும் கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண்மொழித்தேவன் ஆகியோர் வந்தனர். தொரப்பாடி பேரூராட்சி அலுவலகம் அருகே, அவர்களது காரை மறித்த அமைச்சர் சம்பத்தின் ஆதரவாளரான புதுப்பேட்டை நகர அதிமுக செயலாளர் கனகராஜ், பண்ருட்டி தொகுதி செயலாளர் ராமசாமி உள்ளிட்ட 10 பேர் மருத்துவ முகாமிற்குச் செல்ல எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் தகராறு எழுந்துள்ளது.

இதில் இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர். இதில் அமைச்சர்களின் ஆதரவாளர்கள் கனகராஜ், கந்தன், ராமசாமி மற்றும் சத்யா பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் ராஜா, புகழேந்தி, உள்ளிட்டோர் காயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பண்ருட்டி டிஎஸ்பி நாகராஜன் இரு தரப்பினரிடமிருந்து புகார்களை பெற்று விசாரித்து வருகிறார். காயமடைந்த அமைச்சரின் ஆதரவாளர்கள் கந்தன், கனகராஜ், ராமசாமி ஆகியோர் கடலூர் அரசு மருத்துவனையிலும், சட்டமன்ற உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் ராஜா மற்றும் புகழேந்தி பண்ருட்டி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet